ETV Bharat / state

ஏஜெண்டுகளின் ஏமாற்று வேலை? மலேசியாவில் விற்கப்பட்ட தமிழகப் பெண்.. கதறும் குடும்பத்தினர்! - salem

Foreign job: மலேசியாவில் வேலை, கை நிறையச் சம்பளம் எனக்கூறி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்குத் தமிழகப் பெண் விற்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 10:06 PM IST

வெளிநாட்டில் பெண் ரூ. 1.20 லட்சத்துக்கு விற்கப்பட்டதாக பரபரப்பு

சேலம்: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் தன்னுடைய உறவினர்களுடன் மற்றும் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவர் அண்ணாதுரை ஆகியோருடன், சேலம் சரக டிஐஜி உமாவை சந்தித்து, புகார் மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில் “திருப்பத்தூரைச் சேர்ந்த முகமது அலி என்ற ஏஜென்ட், என்னுடைய சகோதரி மகேஸ்வரியிடம் மலேசியாவில் வேலை உள்ளதாகவும் அங்குச் சென்றால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று கூறினார்.

இதனை நம்பி என்னுடைய சகோதரி கடந்த மாதம் 4ஆம் தேதி ஏஜெண்ட் மூலம், சென்னையிலிருந்து விமான மூலம் மலேசியாவுக்குச் சென்றார். பின்னர் அவரை தொடர்பு கொண்டு பேசுகையில், மலேசியாவில் வேலை உள்ளதாகக் கூறிவிட்டு புரோக்கர்கள் தன்னை 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டதாகக் கூறிக் கதறி அழுதார்.

மேலும் சட்டவிரோதமாக ஒரு அறையில் அடைத்து வைத்து சித்தராவதைச் செய்வதாகவும் கூறினார். அதன் பிறகு என்னுடைய சகோதரி தொடர்பு கொள்ள முடியவில்லை. எனது சகோதரி தொடர்ந்து மலேசியாவிலிருந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே என்னுடைய சகோதரியை மீட்டுத் தர வேண்டும் மேலும் மலேசியாவில் வேலை என்று அழைத்துச் சென்று விற்பனை செய்த ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவர் அண்ணாதுரை கூறுகையில் “ திருப்பத்தூரைச் சேர்ந்த முகமது அலி என்பவரும், சென்னையைச் சேர்ந்த முத்து என்பவரும், மகேஸ்வரியிடம் மலேசியாவில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோரில் வேலை உள்ளதாகவும், அங்குச் சென்றால் கை நிறையச் சம்பளம் கிடைக்கும் என்று கூறி மலேசியாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மலேசியாவில் விற்பனை: அங்குச் சென்ற மகேஸ்வரியை, வீட்டில் கழிப்பறைகள் சுத்தம் செய்யும் வேலைக்குப் பணியமர்த்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள தங்களுடைய உறவினர்களுக்குத் தொடர்பு கொண்டு கதறி அழுதுள்ளார்.

மேலும் டிபார்ட்மென்டல் ஸ்டோரில் வேலை என்று கூறி மலேசியாவிற்கு அழைத்து வந்த தன்னை, 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டனர். இந்த தொகையைத் திருப்பிக் கொடுத்தால் மட்டுமே என்னை விடுவார்கள் இல்லை என்றால் கொன்று விடுவார்கள் எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து அவரை வீட்டில் அடைத்து வைத்து இருப்பதாகக் கூறப்படும் அருள் என்ற நபரை அழைத்துப் பேசினோம். இது குறித்து அவர் பேசும் போது, மகேஸ்வரியை 5 ஆயிரம் மலேசிய டாலர் கொடுத்து வாங்கியதாகவும், அதற்குப் பிறகு ஆயிரம் டாலர் செலவு செய்துள்ளதாகவும், மொத்தமாக 7 ஆயிரம் டாலர் திருப்பிக் கொடுத்த அந்தப் பெண்ணை தமிழகத்திற்கும் திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறியுள்ளார்.

7 ஆயிரம் மலேசியா டாலர் என்பது இந்திய மதிப்பிற்கும் 1.20 லட்சம் ஆகும். இதனால் மனமுடைந்த அவர்களது குடும்பத்தார்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கதறி அழுது கொண்டு இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கையை எடுத்து அந்தப் பெண்ணை மீட்க நடவடிக்கை வேண்டும். சட்ட விரோதமாகப் பெண்ணை விற்பனை செய்த முகமது அலி மற்றும் முத்து என்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: நடிகை திரிஷா குறித்து அவதூறு - நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம்! ஆடியோ வெளியிட்டு எதிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.