ETV Bharat / state

கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகள் பாலியல் வழக்கு; தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் - krishnagiri student sexual case - KRISHNAGIRI STUDENT SEXUAL CASE

krishnagiri Schoolgirl sexually assaulted: கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகளுக்கு நடந்த பாலியல் சீண்டல் விவகாரத்தை, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு (credit - NCW X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 11:12 AM IST

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளி மாணவிகள், போலி என்சிசி முகாமில், பாலியல் சீண்டலுக்கு உள்ளான விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் இருந்து "போலி என்சிசி முகாமில் 13 சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளானார்கள்" என்ற தலைப்பில் வெளியான செய்தியை தொடர்ந்து, இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உரிய சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நியாயமான, விசாரணையை உறுதி செய்யுமாறு சென்னை டிஜிபிக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தமிழக அரசு, காவல்துறை 3 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை வழங்க வேண்டும்'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வழக்கு: தனியார் பள்ளிகளுக்கு முக்கிய எச்சரிக்கை.. பள்ளி இயக்குனரகம் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.