ETV Bharat / state

'மேகதாது அணை தமிழ்நாட்டுக்கு தான் ரொம்ப முக்கியம்' - சென்னையில் டி.கே.சிவகுமார் பேச்சு! - dk shivakumar about mekedatu dam - DK SHIVAKUMAR ABOUT MEKEDATU DAM

DK Shivakumar Tamil nadu visit: மேகதாது அணை கர்நாடகாவை விட தமிழ்நாட்டுக்கு மிகவும் முக்கியமானது என்று சென்னைக்கு வந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறினார்.

டி.கே.சிவகுமார்
டி.கே.சிவகுமார் (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 1:50 PM IST

சென்னை: காவிரி ஆற்றின் நீரானது தமிழகத்தின் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. காவிரியில் இருந்து கபினி, கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் அணைகளுக்கு திறந்து விடப்படும் நீர், டெல்டா மாவட்டங்களில் விவசாயத்துக்கு இன்றியமையாத உற்பத்தி காரணியாக உள்ளது. இந்த நிலையில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் 9 ஆயிரம் கோடியில் அணை கட்ட முயற்சி செய்து வருகிறது.

மத்தியிலும், மாநிலத்திலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா குறியாக உள்ளது. அதேபோல, தமிழகத்தில் எந்த ஆட்சி அமைந்தாலும், மேகதாதுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட அதிகம் பயன் பெறப்போவது தமிழ்நாடு தான் என்று அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேத்துப்பட்டு பகுதியில், சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்போடு செயல்பட்டு வரும் பயோ சி.என்.ஜி. இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை ஆய்வு செய்வதற்காக, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இன்று வந்தார். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தைப் போல், கர்நாடகாவில் செயல்படுத்துவது தொடர்பாக டி.கே.சிவக்குமார் சென்னையில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.சிவகுமார், கர்நாடகாவில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பாக தமிழகத்தில் 15 அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்வதற்காக வந்திருப்பதாகவும், பெருமளவிலான திடக்கழிவுகளை எவ்வாறு கையாளுவது, அதிலிருந்து எவ்வாறு இயற்கை எரிவாயு உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தமிழக அரசு அதிகாரிகள் விவரித்ததாக தெரிவித்தார்.

மேலும், கர்நாடகாவில் மேம்படுத்தப்பட்ட திடக்கழிவு மேலாண்மை இருந்தாலும், அதை இன்னும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு இந்த பயணம் உதவும் என நம்புகிறேன் என தெரிவித்த அவர், கடந்த ஓராண்டிற்கு மேலாக தமிழகத்திற்கு வர வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். ஆனால், இப்போதுதான் வர வாய்ப்பு கிடைத்தது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மேகதாது விவகாரம் தொடர்பாக நான் தற்போது விவாதிக்க விரும்பவில்லை. இரண்டு மாநிலங்களுக்கும் மழை உதவும் என நம்புகிறேன். மேகதாது அணை கர்நாடகாவை விட தமிழ்நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. தற்போது மழை கர்நாடகாவை விட தமிழகத்தில் நன்றாக பெய்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் நல்ல நண்பர். முதலமைச்சர் ஸ்டாலின் ஊரில் இல்லை. எனவே, அதற்கு பதிலாக யார் இருக்கிறார்களோ அவரைச் சந்தித்து விட்டுச் செல்வேன்'' என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: சீமான் மீதான அவதூறு வழக்கு; விசாரணை அதிகாரி நியமனம் - அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.