ETV Bharat / state

அரக்கோணம்: ஒரே நாளில் அடுத்தடுத்து 8 வீடுகளில் நகை, பணம் கொள்ளை.. ஹெல்மெட் கொள்ளையர்களை தேடும் போலீஸ்! - arakkonam Robbery case - ARAKKONAM ROBBERY CASE

Arakkonam Robbery case: அரக்கோணம் வட மாம்பாக்கம் பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 8 வீடுகளில் பூட்டை உடைத்து மொத்தம் 15 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளை செய்யப்பட்ட இடம், காவல் நிலையம்
கொள்ளை செய்யப்பட்ட இடம், காவல் நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 10:53 AM IST

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வட மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரியான இவர் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியில் சென்று நேற்று மாலையில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர்கள் சிலர், மறைந்த தனது மனைவியின் படத்துக்கு அணிவித்திருந்த நான்கரை சவரன் செயின், முக்கால் சவரன் தாலி ஆகியவற்றை திருடப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

மேலும் அவரது வீட்டில் இருந்த 3 பீரோக்களை உடைத்து வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். வடமாம்பாக்கம் காமராஜர் நகரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராம்கி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து ஜிமிக்கி, மாட்டல் என 5 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளை அடித்துள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபு வீட்டின் பூட்டை உடைத்து அரை கிலோ வெள்ளி பொருட்கள், 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.

கொள்ளை செய்யப்பட்ட இடம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி கொலுசு, ஒரு கிராம் மோதிரம் திருடியுள்ளனர். வட மாம்பாக்கம் பகுதியில் மட்டும் ஒரே நாளில் அடுத்தடுத்து 8 வீடுகளில் பூட்டை உடைத்து மொத்தம் 15 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இவர்கள் எல்லோரும் வேலைக்கு சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக அதாவது கொள்ளையர்கள் அதிகம் கஷ்டப்படாமல் வீட்டின் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்தும், மறைவான இடத்தில் வைத்திருந்த சாவியை எடுத்து திறந்து வீட்டுக்குள் சென்று பீரோக்களை உடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். ஒரே பகுதியில் அடுத்தடுத்து 8 வீடுகளில் வீட்டின் பூட்டை உடைத்து, வடமாம்பாக்கம் கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பைக்கில் ஹெல்மெட் அணிந்து பகல் நேரத்தில் 2 பேர் வந்ததை சிலர் வந்துள்ளனர். அவர்கள் மீது எங்களுக்கு சந்தேகமாக உள்ளது என்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை அறியும் கும்பல்.. பெரம்பலூரில் சுற்றிவளைத்த அதிகாரிகள்! - illegal gender reveal

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.