சென்னை: தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருட்கள் விற்கப்படுவதாகப் புகாரில் டெல்லி சிபிஐ காவல்துறை வழக்கை விசாரித்து வருகின்றது. இதில், மாதவராவ், சீனிவாசராவ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து கைது செய்தது.
இந்நிலையில், சிபிஐ வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. முறைகேடு மூலமாகப் பெற்ற பணத்தைச் சட்டவிரோதமாக முதலீடுகள் செய்துள்ளதாகவும், இதில், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. எனவே, விக்னேஷ், மாதவ ராவ், சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா, ஏ.எல்.காயத்ரி, மானசா, அருணாகுமாரி, சூர்ய புஷ்பாஞ்சலி, பத்ம பிரியா அஞ்சனி தேவி, விஸ்வநாத், பத்ரிநாத், துர்கா வீர ஹனுமான், ஸ்ரீ வாசவி, நாக பார்வதி தேவி, பி.சேஷகிரி ராவ், ஏ.மனோகர், கிருஷ்ண சுமந்த், சிவக்குமார், பி.செந்தில் முருகன், ஆர்.மன்னர்மன்னன், வி.சம்பத், வி.எஸ்.குறிஞ்சி செல்வன், எஸ்.கணேசன், நவநீத கிருஷ்ண பாண்டியன், பி.வி ராமணா, டி.நடராஜன், பி.ஆர்.சீனிவாசன் மற்றும் நிறுவனங்கள் விஜயந்தி ஸ்பின்னர்ஸ், மேதா டைரி பிரைவேட் லிமிடெட், காயத்ரி ரியல் எஸ்டேட், குபேரா இண்டஸ்ட்ரீஸ் என 27 நபர்கள் மற்றும் 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதி மலர் வாலன்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்படவுள்ள கூடுதல் குற்றப்பத்திரிக்கை அடிப்படையில் தங்கள் தரப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது என தெரிவித்தார். இதனையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அமைச்சர்கள் வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி