சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்காக வருமான வரித்துறையின் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவிருக்கும் 2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, வருமான வரித்துறையால் பிரத்தியேகமாக 24 மணி நேரமும் செயல்படும் (24 x 7) கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. எந்தவொரு தனி நபரோ அல்லது கட்சியோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணம் அல்லது இலவசப் பொருட்களை விநியோகிப்பது பற்றிய புகார்களை, தகவல்களைத் தெரிவிக்க விரும்பினால், வருமான வரி அலுவலகத்தில் உள்ள கீழ்க்கண்ட கட்டணம் இல்லா தொலைபேசி எண், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 6669
மின்னஞ்சல் (e-mail): tn.electioncomplaints2024@incometax.gov.in
புலனம் எண் (WhatsApp No): 94453 94453
அவ்வாறு தெரிவிக்கப்படும் தகவலைப் பகிர்ந்து கொள்பவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேமுதிகவினர் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களை அளிக்கலாம் - பிரமேலதா விஜயகாந்த!