ETV Bharat / state

'ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு' - காடேஸ்வரா சுப்பிரமணியம் பகீர்! - Kadeswara Subramaniam

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 10:17 AM IST

Armstrong murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆளுங்கட்சியினருக்கும் தொடர்பு இருப்பதாகவும், பள்ளிகளில் மாணவர்களை சாதி கயிறுகளை தவிர்க்க கூறிய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தாக்கல் செய்த அறிக்கை இந்து விரோத போக்காக இருப்பதாகவும், இதற்காக அவருக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலும் இந்து முன்னணி மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்துகொண்டார்.

காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

சாதி கயிறுகளைத் தவிர்க்கக் கூறிய அறிக்கை; இந்து விரோத செயலா?: இது குறித்து தூத்துக்குடியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம், "திமுக அரசு இந்துக்களுக்கு விரோதமான அரசாக செயல்படுகிறது. பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் கயிறு கட்டக்கூடாது, விபூதி அணிந்து வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் ஆய்வறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தாக்கல் செய்துள்ளார். ஆனால், சிலுவை போட்டு வரக்கூடாது, பர்தா அணிந்து வரக்கூடாது எனக் கூறவில்லை. இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் அவரை இந்து முன்னணி கண்டிக்கிறது.

உளவுத்துறை செயல்படவில்லை: தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகமாக இருக்கிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் (திமுக) தான் அதில், அதிகமாக ஈடுபடுகின்றனர். முதல்வரோடு நெருக்கமாக இருந்து தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஜாஃபர் சாதிக்கிற்கு சர்வதேச அளவில் தொடர்புள்ளது. உளவுத்துறை சரியாக செயல்படவில்லை எனில், வருங்கால சந்ததியினர் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.

அதிமுக, பாமக தலைவர்கள் கொலை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. காங்கிரஸ் மாவட்ட தலைவர், பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதேபோல அதிமுக, பாமக என பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுபோன்று தினமும் ஒன்று முதல் இரண்டு கொலை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இது தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளதைக் காட்டுகிறது.

உளவுத்துறைக்கு முழு சுதந்திரம் இல்லை: ஒருவர் மீது 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தால், அவர்களை உளவுத்துறை கண்காணிக்க வேண்டும். தமிழக உளவுத்துறை சரியாக செயல்படவில்லை. உளவுத்துறைக்கு தமிழக அரசு முழு சுதந்திரம் அளிக்கவில்லை. சரியான அதிகாரிகளை நியமனம் செய்து முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். அப்போதுதான் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும்.

ஆளுங்கட்சி, ரவுடிகளுக்கு பின்புலமாக உள்ளது. அதனால், காவல்துறையால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று இந்து முன்னணி கருதுகிறது. சட்டவிரோத மதுபானம் மற்றும் மணல் கொள்ளைகள் குறித்த தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டால், அது குற்றவாளிகளுக்கு எளிதாக தெரிந்து விடுகிறது. இதனை, தமிழக அரசு முறையாக கவனிக்க வேண்டும்.

2026-ல் திமுகவிற்கு மிகப்பெரிய தோல்வி: கள்ளக்குறிச்சி விவகாரம் மற்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆகியவற்றில் சிபிஐ விசாரணை தேவை. ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளிவருகிறது. இதனை ஆளுங்கட்சி மாற்றிக் கொள்ளவில்லை என்றால், வரும் 2026 தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அண்ணாமலை Vs செல்வப்பெருந்தகை.. மாறிமாறி போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.