சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அதிகாரி ஒருவர் பெண் ஒருவருடன் தனியார் விடுதி அறையில் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ, சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது. முன்னதாக இந்த அரசு அதிகாரி பணியாற்றிய இடங்களில் இது போன்ற பாலியல் புகார்களில் சிக்கியவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோவை, அவரே வாட்சப் செயலியில் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு தேவகோட்டையில் பணியாற்றி வந்த போது ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக எழுந்த புகாரில் அடிப்படையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அவரது வாட்ஸ் ஆப் செயலியிலிருந்து டவுண் லோட் செய்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்த போது, ஆபாச வீடியோவை பொது இடத்தில் பலரும் பார்க்கும் படி பகிர்ந்த இவர் மீது மாவட்ட ஆட்சியர் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க முடியும் எனவும். இதே போன்று காவல்துறையும் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளதாகவும் கூறினர். சம்பந்தப்பட்ட பெண் புகார் அளிக்கவில்லை என்றாலும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!