விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல் குளம் பகுதியில் நடைபெற்ற அகழாய்வில் ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், அகழாய்வில் இதுவரை சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு உள்ளிட்ட 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட பழங்கால தொல்பொருட்கள் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது இங்கு மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
'பொலந்தொடி தின்ற மயிர் வார் முன்கை வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து' (நெடுநல்வாடை- 141)
— Thangam Thenarasu (@TThenarasu) November 8, 2024
பொன் வளையல்கள் தழும்பு உண்டாக்கிய முன் கையில், வலம்புரிச் சங்கால் செய்த வளையல்களுடன் காப்பு நூலைக் கட்டியிருந்தாள் பெண்ணொருத்தி என்று நெடுநல்வாடை நூல் உரைக்கிறது.
பல ஆயிரம் ஆண்டுகாலமாகவே… pic.twitter.com/ABmygh3aJp
இந்நிலையில் இன்று( நவ 9) தோண்டப்பட்ட அகழ்வாய்வு குழியில் 1.28 மீட்டர் ஆழத்தில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்திலான மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : விஜய கரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு!
அந்த பதிவில், "பொலந்தொடி தின்ற மயிர் வார் முன்கை வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து' (நெடுநல்வாடை- 141)
பொன் வளையல்கள் தழும்பு உண்டாக்கிய முன் கையில், வலம்புரிச் சங்கால் செய்த வளையல்களுடன் காப்பு நூலைக் கட்டியிருந்தாள் பெண்ணொருத்தி என்று நெடுநல்வாடை நூல் உரைக்கிறது.
பல ஆயிரம் ஆண்டுகாலமாகவே தமிழர் நாகரிகம் பொன்னும், பொருளும், அறிவும் நிறைந்த செழிப்பான மூத்த நாகரிகமாக இருந்தது என்பதற்கு மேலும் ஒரு சான்றாக, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அகழாய்வில் இன்று 1.28 மீட்டர் ஆழத்தில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தினால் ஆன மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில், சுடுமண்ணால் ஆன மணி, காதணி, சங்கு வளையல் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்