சென்னை: டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமம் மற்றும் கண் ஆராய்ச்சி மையத்தின் ஆதரவின் கீழ் இயங்கி வரும் டாக்டர்.அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆப்டோமெட்ரி, சென்னையில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக இயங்கி வரும் 12 இல்லங்களில் 400-க்கும் அதிகமான குழந்தைகளுக்கு கண் பரிசோதனைகளை இலவசமாக செய்து தேவை உள்ளவர்களுக்கு கண்ணாடிகளையும் தானமாக வழங்கி உள்ளது.
இந்நிலையில், அனைத்து க்ளினிக் மற்றும் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு விரிவான கண் பரிசோதனைகளை டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனை கட்டணமின்றி வரும் 31ம் தேதி வரை இலவசமாக மேற்கொள்கிறது என அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை உலக பார்வை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'குழந்தைகளே உங்கள் கண்களை நேசியுங்கள்' என்ற கருப்பொருளை மையமாக வைத்து உலக பார்வை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவச் சேவைகளுக்கான பிராந்திய தலைவர் சௌந்தரி கூறும்போது, "உலகளவில் 450 மில்லியன் குழந்தைகளுக்கு சிகிச்சை தேவைப்படும். பார்வை பாதிப்பு நிலைகள் இருக்கின்றன. இவர்களில் பலருக்கு கண் சிகிச்சை பெறுவதற்கான வசதியில்லை. இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் 15 வயது பிரிவிலுள்ள 1000 குழந்தைகளில் ஒரு குழந்தை பார்வைத் திறனற்றதாக இருக்கிறது என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
கிட்டப்பார்வை என அழைக்கப்படும் மயோபியா, 5 வயது முதல் 15 வயது பிரிவிலுள்ள குழந்தைகளிடம் ஏறக்குறைய 7.5 சதவிகிதம் என்ற அளவில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. பார்வை குறைபாடுள்ள குழந்தைகள், பள்ளிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் 2 முதல் 5 மடங்கு குறைவாக இருக்கும்.
இதையும் படிங்க : PresVu Eye Drops: 15 நிமிடத்தில் நல்ல பார்வைத் திறன் - சாதனை கண் மருந்தும், தொடர் சர்ச்சைகளும்!
நிகழ்வுகளில் பங்கேற்க அவர்கள் பெரும்பாலும் தவறுகின்றனர் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஒவ்வொரு குழந்தையும் சிறந்த கண் பராமரிப்பு மற்றும் சிகிச்சைக்கு எளிதான அணுகு வசதியைக் கொண்டிருக்கின்ற ஒரு எதிர்காலம் மீது எமது அர்ப்பணிப்பையும், பொறுப்புறுதியையும் புதுப்பித்துக் கொள்கிறோம்.
சென்னையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான 12 இல்லங்களைச் சேர்ந்த 400க்கும் மேலான சிறார்களுக்கு பயனளித்திருக்கிறது. ஆதரவற்றோருக்கான இல்லம் ஒவ்வொன்றிலும் எங்களின் குழுவினர் கண் பராமரிப்பு மற்றும் தூய்மை குறித்து அக்குழந்தைகளுக்கு தெளிவாக எடுத்துக்கூறி கற்பித்தனர்.
டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான முதுநிலை கண் மருத்துவ நிபுணராகப் பணியாற்றும் டாக்டர். மஞ்சுளா ஜெயக்குமார், கண்கள் விலைமதிப்பற்றவை என்பதை குழந்தைகளும், சிறார்களும் புரிந்துகொள்வது அவசியம்.
கண்களை தொடுவதற்கு முன்பாக, கைகளை கழுவுவது, தேய்ப்பதற்குப் பதிலாக தெளிவான டிஷ்யூக்களைப் பயன்படுத்துவது மற்றும் திரைகளிலிருந்து குறித்த கால அளவுகளில் இடைவெளிவிடுவது போன்ற எளிய பழக்க வழக்கங்களின் மூலம் கண்களை அவர்களால் பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
வெளியில் செல்லும்போது குளிர் கண்ணாடிகளைக் கொண்டு சூரிய ஒளியிலிருந்து கண்களை பாதுகாத்துக் கொள்வதும், டவல்கள் அல்லது கண் சொட்டு மருந்துகள் போன்ற தனிப்பட்ட பொருட்களை பிறரோடு பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதும் அவசியம்.
கேரட் (carrot) மற்றும் இலைகள் கொண்ட காய்கறிகள் மற்றும் கீரைகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் அவர்களது பார்வைத் திறனை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முடியும். கண்ணில் அழுத்தம் அல்லது அடிக்கடி தலைவலி வருமானால், கண் பராமரிப்பு மருத்துவரின் உதவி அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்பதையே இந்த அறிகுறிகள் சுட்டிக்காட்டுகின்றன" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்