ETV Bharat / state

ஊட்டி மருமகள் மரணம்; சித்திரவதை கொலை அம்பலம்.. கணவன், கொழுந்தன் உட்பட 4 பேர் கைது! - Ooty Daughter in law murder

Daughter-in-law killed by poisoning in ooty: உதகையில் இளம் பெண்ணுக்கு கடந்த ஜூன் மாதம் விஷம் கொடுத்து கொன்றதாக மாமியார் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஊட்டி பெண் கொலை வழக்கு
ஊட்டி பெண் கொலை வழக்கு (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 5:41 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அப்துல் சமது. இவரது மனைவி நிலாபர் நிஷா. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் யாஷிகா பர்வீன் (22) என்பவருக்கு உதகை காந்தல் பகுதியைச் சேர்ந்த யாஸ்மின், ஜபருல்லா தம்பதியின் மகன் இம்ரான் என்பவருடன் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது.

இதனையடுத்து, யாஷிகாவை மாமியாரும், கணவரும் சேர்ந்து துன்புறுத்துவதாக அவர் தனது பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூன் 24ஆம் தேதி, யாஷிகா பர்வீன் வலிப்பு ஏற்பட்டு சமையலறையில் கிடப்பதாக பெண்ணின் தாயாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்பு அவரை உதகை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு யாஷிகா இறந்ததாக மருத்துவர்கள் கூறிய நிலையில் சந்தேகம் அடைந்த பெண்ணின் பெற்றோர், அவரது உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என உதகை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து உடற்கூறாய்வு செய்யப்பட்டு கடந்த வாரம் முடிவுகள் வந்தன. இதில் பெண்ணின் கழுத்து, தோள்பட்டை ,விலா எலும்பு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, யாஷிகா பர்வீனின் மாமியார் யாஸ்மின் (49), அவரது உறவினர் காளிப் (56), கணவர் இம்ரான் (30), கணவரின் தம்பி முக்தார் (23) ஆகிய நான்கு பேரை உதகை டி3 காவல் துறையினர் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், யாஷிகாவை இந்த நான்கு பேரும் சேர்ந்து தொடர்ச்சியாக தாக்கி துன்புறுத்தி வந்த நிலையில், விஷம் வைத்து கொலை செய்தது அம்பலமானது. பின்னர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: சீமான் மீதான அவதூறு வழக்கு; விசாரணை அதிகாரி நியமனம் - அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.