ETV Bharat / state

மலேசியாவுக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்.. திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு! - Smuggling in Trichy Airport

Trichy International Airport: திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

foreign currency seized in trichy airport

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 3:07 PM IST

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை, வியட்நாம், கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்றிரவு (வெவ்வாய்க்கிழமை) திருச்சியில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்லத் தயாராக இருந்த ஏர் ஏசியா விமானத்தில், நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்துள்ளனர்.

அப்போது, பயணி ஒருவரது பையில் ரூ.4 லட்சத்து 96 ஆயிரத்து 200 மதிப்புடைய 6 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் (American Dollar), ரூ.18 ஆயிரத்து 997 மதிப்புடைய ஆயிரத்து 100 மலேசிய ரிங்கிட்களும் (Singapore Ringgit) மற்றும் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் இந்திய ரூபாயையும் மறைத்து வைத்து கடத்திச் செல்ல இருந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, அவரிடமிருந்த வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அமெரிக்க பயணியிடமிருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல்..விடிய விடிய நடந்த விசாரணை - நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.