ETV Bharat / state

நிவாரணத்தை முதலமைச்சரிடமே திருப்பிக் கொடுத்த விவகாரம்.. மீனவரின் விளக்கம் என்ன? - மயிலாடுதுறை

MK Stalin in Mayiladuthurai: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய நலத்திட்ட உதவியை, முதலமைச்சரிடமே மீனவர் ஒருவர் திருப்பி வழங்கிய நிலையில், தற்போது இது குறித்த விளக்கத்தை மீனவர் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 5:16 PM IST

Updated : Mar 4, 2024, 7:47 PM IST

நிவாரணத்தை முதலமைச்சரிடமே திருப்பி கொடுத்த விவகாரம்... மீனவரின் விளக்கம் என்ன?

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத் திறப்பு விழா இன்று (மார்ச்.04) நடைபெற்றது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கட்டடத்தைத் திறந்து வைத்து தமிழக அரசு சார்பில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதில், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் மீன்வளத்துறை சார்பாக பூம்புகார் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ராமச்சந்திரன் மகன் ரமேஷ் என்பவருக்கு இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட விசைப் படகிற்கான 2 லட்சம் ரூபாய்க்கான நிவாரணத் தொகை காசோலையாக வழங்கினார்.

ஆனால், நிவாரணத் தொகைக்கான அனுமதி ஆணையை மீண்டும் முதலமைச்சரிடமே திருப்பி வழங்கினார். இதனால், மேடையில் சலசலப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், மீனவர் ரமேஷை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

நிவாரணத் தொகை காலதாமதமாக வழங்கப்பட்டதால் மீனவர் திருப்பிக் கொடுத்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், நிவாரணத் தொகைக்கான அனுமதி ஆணையில் பெயர் மாறி இருந்ததால், திருப்பி வழங்கியதாக மீனவர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மீனவர் ரமேஷ் கூறியதாவது, "நிவாரணத் தொகைக்கான அனுமதி ஆணையில் பெயர் மாறி இருந்ததால் திருப்பி வழங்கினேன். தற்போது எனது பெயருக்கு மாற்றம் செய்து பெற்றுக்கொண்டேன். தமிழக முதலமைச்சருக்கு நன்றி. எங்களது குடும்பமே திமுகவைச் சேர்ந்தவர்கள் தான். எனது பெயரில் இல்லாமல் இருந்ததால் தான் திருப்பி வழங்கினேன். வேறு எந்த காரணமும் இல்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீங்கள் பேசியதன் பின்விளைவுகள் தெரியாதா? - அமைச்சர் உதயநிதியின் சனாதன தர்மம் குறித்த பேச்சுக்கு நீதிமன்றம் கேள்வி!

Last Updated : Mar 4, 2024, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.