சென்னை: வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கி ஏப்ரல் 27 வரை நடக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. காலை 11.00 மணி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்களில் வேட்பு மனுக்களை பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பாணை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கான அறிவிப்பாணையில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பாணையை 9 மணிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒட்ட வேண்டும். அதனைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
மேலும், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "மோடி போட்டியிடும் தொகுதியில் விவசாயிகள் நிர்வாணமாக வேட்புமனு தாக்கல் செய்வோம்" - அய்யாக்கண்ணு எச்சரிக்கை..