ETV Bharat / state

பேராயரும், அரசியல் தலைவருமான எஸ்றா சற்குணம் காலமானார் - Ezra Sargunam passed away - EZRA SARGUNAM PASSED AWAY

இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிக்கள் சர்ச் ஆஃப் இந்தியா (ECI) நிறுவனத்தின் பேராயருமான எஸ்றா சற்குணம் உடல் நலக்குறைவால் நேற்றிரவு (செப்.22) காலமானார்.

காலமான பேராயர் எஸ்றா சற்குணம்
காலமான பேராயர் எஸ்றா சற்குணம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2024, 3:48 PM IST

சென்னை: கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பின் காரணமாகவும் உடல் நலக்குறைவு காரணமாகவும் சிகிச்சை பெற்று வந்த பேராயர் எஸ்றா சற்குணம் கடந்த சில மாதங்களாகவே வெளியில் செல்ல முடியாததால் வீட்டிலே சிகிச்சை பார்த்து வந்திருந்தார்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதையடுத்து நேற்று (செப்.22) மாலை திடீரென உடல்நிலை மேலும் மோசமானதால் உயிரிழந்தார். கடந்த ஜூலை 19ஆம் தேதி தனது 86வது பிறந்தநாளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

அது மட்டும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான அரசியல் தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்துள்ளார். குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, விசிக தலைவர் தொல் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோருடன் நெருங்கி பழகி வந்திருந்தார்.

இதையும் படிங்க: "குஜராத் போய் பாருங்க, அப்போ தான் உலகத் தரம் என்னானு தெரியும்" - மு.க.ஸ்டாலினுக்கு எல்.முருகன் ஆலோசனை!

சென்னை கீழ்ப்பாக்கம் அருகே உள்ள இறையியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் பொதுமக்களின் பார்வைக்காக இன்று வைக்கப்பட்டுள்ளது. எஸ்றா சர்குணத்தின் மகள் வெளிநாட்டில் இருப்பதால் அவர் வந்த பிறகு அவரது உடல் அடக்கம் செய்யபடலாம் என தகவல் வெளியாகி உள்ளது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.