ETV Bharat / state

"புற்றுநோய்க்கு எதிரான போரில் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்".. அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்! - sarcoma cancer

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 2:53 PM IST

Anbil Mahesh Poyyamozhi: புற்றுநோய்க்கு எதிரான போரில் அனைவரும் கைகோர்த்து ஒருங்கிணைய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேரணியில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பேரணியில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Credit - Anbil Mahesh x page)

சென்னை: அப்போலோ புற்றுநோய் புரோட்டான் மையம் சார்பில், சென்னையில் ஒருங்கிணைத்த சர்கோமா புற்றுநோய் குறித்தான சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்தப் பேரணியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அப்போலோ குழும புற்றுநோயியல் மற்றும் இண்டர்நேஷனல் செயல்பாடுகள் துறையின் இயக்குனர் ஹர்ஷத் ரெட்டி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குறிப்பாக, சர்கோமா புற்றுநோயிலிருந்து மீண்டவர்களும் இதில் பங்கேற்றனர்.

சர்கோமா புற்றுநோய்: சர்கோமா என அழைக்கப்படுவது புற்றுநோயின் ஒரு வகையாகும். இது ஒரு அரிதான மற்றும் பெரும்பாலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் ஒரு நோயாகும். இது மிக அதிகமாக குழந்தைகளையே பாதிக்கிறது. எனவே, இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்நோயின் கடும் சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு நம்பிக்கை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப் பேரணியானது நடத்தப்பட்டது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறும்போது, "மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் நமது மாநிலத்தின் தனிப் பண்புகளான விடாப்பிடியான ஆர்வம் மற்றும் வலுவான நம்பிக்கையை இந்நிகழ்வு பிரதிபலிக்கிறது.

புற்றுநோயை வென்று வாழ்பவர்களையும் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் ஆதரிப்பதன் வழியாக சமூகத்தில் நேர்மறை தன்மையையும், திறனதிகார உணர்வையும் இன்னும் பரவலாக நம்மால் உருவாக்க முடியும். இந்த உன்னதமான நோக்கத்தைக் கொண்ட இந்நிகழ்வுக்கும், முயற்சிகளுக்கும் எனது ஆதரவை வழங்குவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

புற்றுநோய்க்கு எதிரான போரில் அனைவரும் கைகோர்த்து ஒருங்கிணைய வேண்டும் என்று உளமார ஊக்குவிக்கிறேன். 5 கி.மீ. சைக்ளத்தான் நடைபெற்றது. தங்களது குறிக்கோள்களையும், இலக்குகளையும் அடைவதிலிருந்து புற்றுநோய் போராளிகளை எந்தவொரு சக்தியோ அல்லது சவாலோ தடுத்துவிட முடியாது.

புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் அவசியமான, தளராத ஆற்றல் மற்றும் மன உறுதியை வெளிப்படுத்தும் வகையில் சர்கோமாவிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கையை வாழும் போராளிகளின் பங்களிப்பு அமைந்தது" என தெரிவித்தார்.

தொடர்ந்து, எலும்பியல் சார்ந்த புற்றுநோயியல் துறையின் சிறப்பு நிபுணர் விஷ்ணு ராமானுஜன் கூறும்போது, "சர்கோமா புற்றுநோய் என்பது ஒரு சிக்கலான, தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிற ஒரு நோயாகும். இதன் தனித்துவமான சவால்களை சமாளிப்பதற்கு பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்த ஒரு சிகிச்சை அணுகுமுறை தேவைப்படுகிறது.

நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது இது சுமத்துகிற கடுமையான பாதிப்பை நன்கு உணர்ந்திருக்கின்றோன். இதை சமாளித்து வெற்றி காண்பதற்கு தனிப் பயனாக்கப்பட்ட பராமரிப்பு, பல்வேறு உரைகளை உள்ளடக்கிய சிகிச்சை அணுகுமுறை, தைரியமளிக்கும் ஆலோசனை மற்றும் பிறரின் தளராத ஆதரவு ஆகியவை கண்டிப்பாக அவசியம் என்று நம்புகிறேன்.

இப்புற்றுநோய் தொடர்பான தவறான எண்ணங்களையும், கட்டுக்கதைகளையும் அகற்றுவதும் மற்றும் இது பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதும் இச்செயல்பாட்டில் முதல் நடவடிக்கையாகும். 'வின்னர்ஸ் ஆன் வீல்ஸ் சைக்ளத்தான்' என்ற நிகழ்வின் வழியாக சர்கோமா புற்றுநோய் தொடர்பான மௌனத்தைக் கலைப்பதும் மற்றும் சிகிச்சையின் மூலம் பாதிப்பிலிருந்து மீண்டு உயிர் வாழ்பவர்களுக்கு, அவர்களது தைரியமிக்க வெற்றிக்கதைகள் குறித்து பகிர்ந்துகொள்ள ஒரு மேடையை வழங்குவதும் எங்களது நோக்கமாக இருக்கிறது" என்று கூறினார்.

இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை: ராதாகிருஷ்ணன் உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.