ETV Bharat / state

மனநலம் பாதிக்கப்பட்ட ஆந்திர இளைஞர்; 4 வருடத்திற்குப் பின் பெற்றோரிடம் ஒப்படைத்த அறக்கட்டளை! - mentally challenged person rescue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 3:14 PM IST

Mentally Challenged Person Rescue: மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு சிகிச்சை அளித்து 4 ஆண்டுகளுக்குப் பின் பெற்றோரிடம் ஒப்படைத்த தனியார் அறக்கட்டளையின் செயல், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

குடும்பத்துடன் இணைந்த சையத்
குடும்பத்துடன் இணைந்த சையத் (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு: ஆந்திர மாநிலத்தில் உள்ள கரீம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சையத். இவர் பள்ளிப் படிப்பை முடித்து, கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா காலகட்டத்தில் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் பகுதியில் வேலை செய்து வந்துள்ள நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளார். இவருடைய பெற்றோர் மற்றும் ஒரு உடன் பிறந்த தங்கை ஆந்திராவில் உள்ள நிலையில், மனநிலை பாதிக்கப்பட்டதால், அவரால் சொந்த ஊருக்கு திரும்ப இயலவில்லை.

இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்கள் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை கண்டு அஞ்சி விரட்டியதால், அங்கிருந்து ஒவ்வொரு பகுதியாக இடம் பெயர்ந்து ஈரோடு மாவட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சேலம் - கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சரளை என்ற பகுதியில் உள்ள போக்குவரத்து நிழற்குடையில் வந்து சையத் வந்து தங்கி உள்ளார்.

யாரிடமும் உணவு கூட கேட்டு வாங்காமல் பொதுமக்களே கொடுக்கும் உணவை மட்டும் வாங்கிச் சாப்பிட்டு வந்துள்ளார். பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சையதை மீட்ட தனியார் (அட்சயம்) அறக்கட்டளை நிறுவனம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்கியுள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளில் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் மூலமாக பூரணமாக குணமடைந்து வந்தார். இதனிடையே நான்கு ஆண்டுகளாக காணாமல் போனதால், சையத் இறந்து விட்டதாகவே அவரது பெற்றோர் முடிவுக்கு வந்து உள்ளனர். இந்நிலையில் பூரணமாக குணமடைந்த சையத் அளித்த தகவலின் பெயரில், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். சையத் உயிருடன் இருப்பதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக ஆந்திராவில் இருந்து ஈரோட்டிற்கு வந்தனர்.

பூரணமாக குணமடைந்த சையத்தை அறக்கட்டளையினர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் மூலமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கடந்த நான்கு ஆண்டுகளாக மகன் இறந்து விட்டதாக எண்ணி தினந்தினம் கண்ணீர் விட்டு வந்த பெற்றோர், மகன் உயிருடன் கிடைத்ததை தொடர்ந்து மகனை மீட்டு சிகிச்சை அளித்தவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பழனியில் கி.பி.18ஆம் நூற்றாண்டு செப்புப்பட்டயம் கண்டுபிடிப்பு! - 18th century AD copper plate

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.