ETV Bharat / state

புறப்பட்ட சிறிது தூரத்திலேயே கல்வி சுற்றுலா பேருந்து விபத்து.. ஈரோட்டில் கல்லூரி மாணவி உயிரிழந்த சோகம்! - erode government hospital

Erode Accident: ஈரோடு அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவி உயிரிழந்தார். படுகாயமடைந்த 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாணவி உயிரிழப்பு
ஈரோட்டில் தனியார் கல்லூரி சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 10:47 AM IST

Updated : Jan 29, 2024, 12:09 PM IST

ஈரோட்டில் தனியார் கல்லூரி சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து

ஈரோடு: ஈரோடு அடுத்த வேப்பம்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த கல்லூரியில் பி.பி.ஏ மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியர்கள் 50க்கும் மேற்பட்டோர், கர்நாடகாவிற்கு கல்விச் சுற்றுலா செல்வதற்காக, கல்லூரியின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் பேருந்தில் நேற்று (ஜன.28) இரவு 11.00 மணியளவில் புறப்பட்டுள்ளனர்.

பேருந்து புறப்பட்டு சிறிது தூரம் மட்டுமே சென்ற நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்ட மாணவர்களில், 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் ஸ்வேதா என்ற மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனை மற்றும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து, ஈரோடு தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: செங்கல்பட்டு, திண்டிவனம் வழி பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்! எப்போதிலிருந்து தெரியுமா?

Last Updated : Jan 29, 2024, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.