ETV Bharat / state

தென்காசியில் கிராமியக் கலைகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு! - LOK SABHA ELECTION 2024

Election Awareness in Tenkasi: 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, தென்காசி மாவட்டத்தில் 500 கிராமிய கலைஞர்கள், 7,000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

election-awareness-rally-with-folk-arts-at-tenkasi
தென்காசியில் கிராமியக் கலைகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 12:35 PM IST

Updated : Apr 7, 2024, 3:06 PM IST

தென்காசியில் கிராமியக் கலைகளோடு தேர்தல் விழிப்புணர்வு

தென்காசி: தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி இந்தியத் தேர்தல் ஆணையம் பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கையெழுத்து இயக்கங்கள், வாகனப் பேரணிகள் உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று (சனிக்கிழமை) பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தியும், நேர்மையான முறையில் தேர்தலைச் சந்திப்பதை வலியுறுத்தியும் உலக சாதனை படைக்கும் வகையில் பிரமாண்ட வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கிராமியக் கலைஞர்கள், 7,000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தொடங்கி வைத்தார். இந்த பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணியில் குழு குழுவாக சேர்ந்து பெண்கள் ஒயிலாட்டம், கோலாட்டம் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய முளைப்பாரி உள்ளிட்டவை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.

தொடர்ந்து பறை இசைகள் முழங்க, செண்டை மேளம் வாசிக்க, பரதநாட்டியம், வில்லிசை உள்ளிட்ட கிராமியக் கலை நிகழ்ச்சிகளுடன் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து, கல்லூரி மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலூன்களை ஏந்தியவாறு, தேர்தலை நேர்மையாகச் சந்திக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆரவாரத்துடன் பேரணியில் பங்கேற்றனர்.

புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணியானது, 2 கிலோமீட்டர் தொலைவு வரை வலம் வந்து குத்துக்கல்வலசை பகுதியில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியின் இறுதியில், எலைட் உலக சாதனை நடுவர் ரக்‌ஷிதா உலக சாதனைக்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள், கல்லூரி மாணவிகள், கிராமியக் கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கமல் கிஷோர் கூறியதாவது, “வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதில் ஒரு பகுதியாக, இந்த பிரமாண்டமான பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பெரும்பாலான மகளிர் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த உற்சாகம் வாக்களிக்கும் நாளிலும் இருக்க வேண்டும். வருகின்ற 10ஆம் தேதி அல்லது 11ஆம் தேதி 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, தென்காசி மாவட்டம் முழுவதும் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது” என்றார்.

இதையும் படிங்க: கேரளா போலீஸ் தேடிவந்த தலைமறைவு குற்றவாளி..சென்னையில் சிக்கியது எப்படி?

Last Updated : Apr 7, 2024, 3:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.