ETV Bharat / state

“செந்தில் பாலாஜிக்காக எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! - EDAPPADI PALANISWAMY

Edappadi Palanisamy: கரூரில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி, திமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதன் காரணத்தால், அதை மறைப்பதற்காக பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 3:17 PM IST

கரூர்: 100 கோடி நில மோசடி வழக்கில் கடந்த ஜூலை 17ஆம் தேதி கரூர் சிபிசிஐடி போலீசார் கேரளாவில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கரூர் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஜூலை 30ஆம் தேதி ஜாமீன் வழங்கி, தினந்தோறும் கரூர் சிபிசிஏடி அலுவலகத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனை அடுத்து, ஜூலை 31ஆம் தேதி திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று இரவு கரூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டிற்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்து, சுமார் ஒரு மணி நேரம் நலம் விசாரித்தார்.

இந்த சந்திப்பின் போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், மா.சின்னச்சாமி, என்.ஆர். சிவபதி, மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வேடசந்தூர் பரமசிவம், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “அதிமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. நிலத்திற்கும், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் சம்பந்தம் கிடையாது. வேண்டுமென்றே திட்டமிட்டு இதை செய்துள்ளனர். செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதன் காரணத்தால், அதை மறைப்பதற்காக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது” என்றார்.

join ETV Bharat WhatsApp channel click here
join ETV Bharat WhatsApp channel click here (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: “அது தற்கொலைக்குச் சமம்”.. மேகதாது அணை விவகாரத்தில் துரைமுருகன் பேச்சு! - Minister Durai murugan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.