ETV Bharat / state

கப்பலூர் டோல்கேட் போராட்டம்; ஆர்.பி.உதயகுமார் கைது.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி! - Kappalur Toll protest

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 6:47 PM IST

Kappalur Toll protest: மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் புதிய கட்டணங்களை எதிர்த்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை போலீசார் கைது செய்ததற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்
போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கான மாதாந்திர கட்டணம் 340 ரூபாயாகவும், கனரக வாகனங்களுக்கு 50 சதவீத விலக்கு அளிக்கப்பட்டது இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன ஓட்டிகளின் போராட்டத்திற்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் அதிமுக தொண்டர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டனர். இதனிடையே, கப்பலூர் சுங்கச்சாவடி புதிய கட்டண அமலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருமங்கலம் வியாபார சங்கத்தினர் கடை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

முன்னதாக, கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டி சுமார் 12 ஆண்டுகளாக உள்ளூர் வாகன ஓட்டிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டத்தைத் தொடர்ந்து அவ்வப்போது கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டண விலக்கு அளித்து வந்தது.

இதனிடையே, கடந்த வாரம் சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில், உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு 2020 முதல் 2024 வரை 4 ஆண்டுகள் சுங்கச்சாவடியைக் கடந்து சென்றதாகவும், அதற்கான சுங்க கட்டணம் பாக்கி உள்ளதாகக் கூறி ரூ.50 ஆயிரம் முதல் ரூ.22 லட்சம் வரை கட்டணம் செலுத்தக்கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், இன்று முதல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு கிடையாது என்றும், வழக்கமாக நடைமுறையில் உள்ள வாகன கட்டணத்தில் இருந்து உள்ளூர் வாகன ஓட்டிகள் 50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் 2 நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், திருமங்கலம் டிஎஸ்பி அருள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, காவல் துறையினர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித சமரசமும் எட்டப்படாத நிலையில், ஆர்.பி.உதயகுமார் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், ஆர்.பி.உதயகுமார் கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், "திமுக தேர்தல் அறிக்கையில் டோல் கேட்கள் அகற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. எனவே கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என்றும், உள்ளூர் மக்களுக்கு முழு கட்டண விலக்கு அளிக்க வேண்டுமென்றும், அமைதியான முறையில் போராடிய ஆர்.பி.உதயகுமார் உட்பட் அதிமுக தொண்டர்களை கைது செய்துள்ள விடியா திமுக அரசிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; பல்வேறு இடங்களில் குளறுபடி.. பாமகவினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.