ETV Bharat / state

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்! - ED raid in Jaffer Sadiq place - ED RAID IN JAFFER SADIQ PLACE

ED raid in Jaffer Sadiq place: ரூ. 2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அமலாக்கத் துறை, ஜாபர் சாதிக் - கோப்புப்படம்
அமலாக்கத் துறை, ஜாபர் சாதிக் - கோப்புப்படம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 10:54 PM IST

சென்னை: ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில், மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அவரது சகோதரரையும் அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்று இருப்பதை உறுதி செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான 55.30 கோடி மதிப்புள்ள சொத்துகளை பண மோசடி தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் முடக்கியுள்ளனர்.

இதில், 14 அசையா சொத்துகள் அடங்கும். மேலும், ஜேஎஸ்எம் (JSM) ரெசிடென்சி, சொகுசு பங்களா, ஜாகுவார், மெர்சிடிஸ் (Mercedes) உள்ளிட்ட 7 சொகுசு வாகனங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

தேசிய போதை தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் அமலாக்கத் துறை விசாரணையில் தமிழ்நாட்டில் 15 இடங்களில் இந்த சொத்துகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக் தனது சகோதரர் முகமதுடன் கூட்டு சேர்ந்து சொத்துக்கள் வாங்கியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் ரியல் எஸ்டேட், திரைப்படத் தயாரிப்பு, விருந்தோம்பல் மற்றும் தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைககளில் முதலீடு செய்துள்ளனர். முகமது முஸ்தபா, ஜமால் முகமது, அமீனா பானு, மைதீன் கனி போன்ற பினாமிகள் பலர் பணத்தை பயன்படுத்தியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஜாபர் சாதிக் சகோதரருக்கு 7 நாட்கள் அமலாக்கத்துறை காவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.