ETV Bharat / state

திண்டுக்கல் மாநகராட்சி வரிப்பணம் கையாடல் வழக்கு; இ-சேவை மைய உரிமையாளர் கைது! - Dindigul corporation tax fraud case - DINDIGUL CORPORATION TAX FRAUD CASE

திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த விவகாரத்தில், போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து கொடுத்த இ-சேவை மைய உரிமையாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கைதான ரமேஷ் ராஜா
கைதான ரமேஷ் ராஜா (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 3:53 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் நெட்டுத் தெருவைச் சேர்ந்த சரவணன் மாநகராட்சியில் கணக்கு பிரிவு இளநிலை உதவியாளராக பணிபுரிந்தார். இவர் 2023 ஜூனிலிருந்து மக்கள் வரியாக செலுத்திய ரூ 4.66 கோடியை வங்கியில் செலுத்தாமல் போலி ஆவணங்கள் தயாரித்து கையாடல் செய்தார்.

இந்த விவகாரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியவர இதில் ஈடுபட்ட சரவணன், கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை உதவியாளர் சதீஷ், நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மேலும் இதுகுறித்து, குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சரவணன், சாந்தி, வில்லியம் சகாயராஜ் ஆகியோர் 2 மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் சரவணனுக்கு வங்கியில் பணம் செலுத்தியது போல் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தது வேதாந்திரி நகரைச் சேர்ந்த ரமேஷ் ராஜா என தெரிந்தது.

இதையும் படிங்க: 267 கிலோ தங்கம் கடத்தல்; சென்னை ஏர்போர்ட் சம்பவத்தில் இரண்டு பேர் மீது காபி போசா சட்டம் பாய்ந்தது..!

இவர் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இ சேவை மையம் நடத்தி வருகிறார். ரமேஷ் ராஜாவும், சரவணனும் பள்ளி காலம் முதல் நண்பர்கள் என்பதும், இருவரும் இணைந்தே இம்மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

ரமேஷ் ராஜாவை இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ.,கார்த்திகேயன் மற்றும் போலீசார் கைது செய்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவர் மீது விருதுநகரில் தனியார் வங்கியில் வேலை செய்த போது நகை கையாடலில் ஈடுபட்டது உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் மாநகராட்சி வரிப்பணம் கையாடல் விவகாரத்தில் விசாரணை விரைவாக நடைபெறுவதாகவும் மேலும் பலர் சிக்குவார்கள் என்று மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.