ETV Bharat / state

திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து! - ARIYALUR LORRY ACCIDENT

Tipper lorry accident: திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மற்றொரு டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு லாரி டிரைவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய லாரிகள் புகைப்படம்
விபத்தில் சிக்கிய லாரிகள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 2:52 PM IST

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த மற்றொரு டிப்பர் லாரி, முன்னே நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரி நின்று கொண்டிருப்பது தெரியாமல், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராமல் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு லாரி டிரைவர்களும், லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில், விபத்து நடந்த போது அந்த சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரங்களில் தேவையில்லாமல் கனரக வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும், அவ்வாறு வாகனங்கள் நிறுத்துவதால் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் தேவையின்றி நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: அரியலூரில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து; சிறுமி உள்பட 12க்கும் மேற்பட்டோர் காயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.