ETV Bharat / state

முதல்வர் நிச்சயம் கள்ளக்குறிச்சிக்கு செல்வார் - ஆர்.எஸ் பாரதி உறுதி! - KALLAKURICHI HOOCH TRAGEDY

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 6:29 PM IST

KALLAKURICHI HOOCH TRAGEDY: "திருடனாய் பார்த்து திறந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்ற எம்ஜிஆர் பாடல் போல "குடிகாரனாய் பார்த்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது", என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ் பாரதி செய்தியாளர் சந்திப்பு
ஆர்.எஸ் பாரதி செய்தியாளர் சந்திப்பு (CREDIT - ETV Bharat TamilNadu)

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கள்ளக்குறிச்சி சம்பவம் எதிர்பாராது நடந்த ஒன்று. இதில் கடந்த ஆட்சியில் நடைபெற்றது போல இல்லாமல் மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அரசு அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிமுக, பாஜகவிற்கு தொடர்பு: இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி ஆதாயம் தேடுவதற்கு தவறான கண்ணோட்டத்தில் அணுகுகிறார்கள். இதில் அவர்களுக்கு அக்கறை இருக்குமானால் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பாஜக, அதிமுகவை சார்ந்தவர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவலாக வந்து கொண்டிருக்கிறது. இதில் உண்மை நிச்சயமாக வெளிவரும்.

இதையெல்லாம் தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சிக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் ஏதோ மூடி மறைப்பதற்கு அல்ல. இதை சட்டமன்றத்திலேயே விவாதிக்கலாம் என முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவரை அழைத்தார். ஆனால் கேள்வி கேட்பதற்குகூட வராமல் நாடகமாடி விட்டு சென்றுவிட்டார்.

சாராயம் எப்போது வந்தது என்ற வரலாறு நிர்மலா சீதாராமனுக்கு தெரியுமா? 1971-ல் கலாச்சாராயம் ஆறாக ஓடியது. தமிழ்நாட்டிற்கு அருகில் உள்ள கேரளா, ஆந்திரா, கர்நாடகத்தில் மதுவிலக்கு இல்லை. ஆகவே தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தவில்லை. 1971லிருந்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க திமுகவின் பொதுக்குழுவை கூட்டி மதுவிலக்குக்காக மதுக்கடைகளை அரசே நடத்தலாம் என முன்மொழிந்தவர் மறைந்த எம்ஜிஆர். நிர்மலா சீதாராமன் திமுக மீது குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக பேசுகிறார்.

1972ல் திமுகவிலிருந்து பிரிந்து 1973 இடைத்தேர்தலின்போது எம்ஜிஆர் பொதுக்குழுவில் ஆதரித்து தீர்மானத்தை நிறைவேற்றினாரோ அதையே கலங்கப்படுத்தி பேசி வெற்றி பெற்றுவிட்டார். 1972 இல் திறக்கப்பட்ட மதுக்கடைகள் 1973 திமுக ஆட்சியில் மூடப்பட்டது. ஆனால் இது திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. நிர்மலா சீதாராமன், எடப்பாடி பழனிசாமி போன்றோர் முழு பூசணிக்கையை சோற்றில் மறைக்கிறார்கள்.

எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் தடை செய்யப்பட்ட குட்கா விவகாரத்தில் அன்றைக்கு அமைச்சராக இருந்தவர்களுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பது குறித்து கைப்பற்றப்பட்ட டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சிபிஐ இயக்குனரிடம், நானும் டிகேஎஸ் இளங்கோவனும் நேரில் சென்று புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆனால் கள்ளக்குறிச்சி விவகாரத்தை திசை திருப்பவே சிபிஐ விசாரணை கேட்கிறார்கள். கள்ளக்குறிச்சி தொகுதியில் மூன்று ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் செந்தில்நாதனுக்கு கள்ளச்சாராயம் விற்றது தெரியாதா?. சட்டமன்ற உறுப்பினருக்கு தெரியும் என ஒத்துக் கொள்கிறார். ஆனால் காவல்துறை, பத்திரிகைகள், முதலமைச்சரிடமோ அந்த சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தாரா? ஏன் அப்படி செய்யவில்லை. அவருக்கு தெரியும் அவரும் இதற்கு உடந்தை தானே? அப்படி தெரிவித்திருந்தால் முதலமைச்சரின் கவனத்திற்கு வந்திருக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பார்.

திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை தாங்கிக் கொள்ள முடியாமல் இந்த விவகாரத்தை பூதாகரமாக்குகிறார்கள். திமுகவிற்கும் இதற்கும் தொடர்பு இருக்கு என்கிறார்கள். பாஜகவை சார்ந்தவர்க்கு இதில் தொடர்புள்ளது. நீங்கள் ஆளுகிற பாண்டிச்சேரி, ஆந்திராவில் இருந்து தான் மெத்தனால் வந்ததாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்? சம்பவம் நடந்த அடுத்த நிமிடத்தில் இருந்து தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த பிறகு இவ்வளவு சாராயம் பாக்கெட்டுகள் அழிக்கப்பட்டிருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கிறார். இதன் மூலம் அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறாரா?.

கள்ளக்குறிச்சி மக்களுக்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் நன்றாக தெரியும். யார் யார் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்த பட்டியல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கொண்டிருக்கின்றன. பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்திலும், குஜராத்தில் பிரதமர் மோடி முதலமைச்சராக இருந்தபோதும் 130 பேர் கள்ளச்சாரயம் குடித்து இறந்தார்கள். அதற்கும் ஏன் சிபிஐ விசாரணை போடவில்லை.

கும்பகோணம் மகாமக குளத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் குளித்த நிகழ்வில் அவ்வளவு மக்கள் இறந்தார்களே அதற்காக ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா? எடப்பாடி பழனிச்சாமி மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திற்கு வந்து பேசலாம் அதனை சந்திப்பதற்கு எங்கள் தலைவர் தயாராக இருக்கிறார்.

சின்ன கமலாலயம்: அதிமுக ஆட்சியில் இருந்த அதே காவல்துறையினர் தான் இன்றும் இருக்கிறார்கள். நாங்கள் மட்டும் என்ன புதிதாக எடுத்தோமா?. ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? ஆளுநர் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என பார்ப்போம். கமலாலயம் பாஜகவின் பெரிய தலைமையகம், ஆளுநர் மாளிகை சின்ன கமலாலயம். முதலமைச்சர் நிச்சயமாக கள்ளக்குறிச்சிக்கு செல்வார் மக்களை சந்திப்பார்.

தவறு நடந்திருக்கிறது அதற்குரிய தண்டனை அவர்களுக்கு வழங்கப்படும். அதுதான் செய்யப்படும்; வேறு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? கள்ளச்சாராய விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண்பதற்கு தான் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. "திருடனாய் பார்த்து திறந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்ற எம்ஜிஆர் பாடல் போல "குடிகாரனாய் பார்த்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது", என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: கணவனை இழந்து தவிக்கும் 44 பெண்கள்.. ஈடிவி பாரத் கள ஆய்வு தகவல் - Kallakurichi Hooch Tragedy

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.