ETV Bharat / state

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு: சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் திமுக எம்பி ஆ.ராசா ஆஜர் - DMK MP A Raja Appeared In CBI Court - DMK MP A RAJA APPEARED IN CBI COURT

DMK MP A Raja Illegal Money Transaction Case: சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (ஆக.19) சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

ஆ.ராசா (கோப்புப் படம்)
ஆ.ராசா (கோப்புப் படம்) (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 19, 2024, 2:20 PM IST

சென்னை: திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமாக உள்ள ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

அந்த வழக்கின் அடிப்படையில் டெல்லி, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. அதன் அடிப்படையில் ஆ.ராசா, அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

7 வருடங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு திமுக எம்.பி ஆ.ராசா, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிடெட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் மீது கடந்த 2022ஆம் ஆண்டு சென்னையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது.

அதில், குற்றம் சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு அமலக்கதுறையும், ஆ.ராசா, அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி, மற்றும் கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில் வேலவன் முன்பு இன்று (ஆக.19) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆ.ராசா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

இதனை அடுத்து வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனிடையே, அடுத்த விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு ஆ.ராசா சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.