ETV Bharat / state

நாளை மோடி குமரி பயணம்; திமுக, காங்கிரஸ், சிபிஐ(எம்) எதிர்ப்பு! - Narendra Modi visit Kanyakumari - NARENDRA MODI VISIT KANYAKUMARI

Modi in Kumari: பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்து, கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவுப் பாறையில் தியானத்தில் ஈடுபட உள்ளதற்கு அனுமதி அளிக்ககூடாது என திமுக, காங்கிரஸ் மற்றும் சிபிஐ(எம்) உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு கடிதங்கள் வாயிலாக வலியுறுத்தியுள்ளன.

Modi
மோடி, விவேகானந்தர் பாறை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 9:05 PM IST

சென்னை: நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு வருகிற ஜூன் 1-ம் தேதியும், அதனைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், நாளை (மே 30) பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார். இவ்வாறு குமரிக்கு வரும் பிரதமர் மோடி, அங்கு உள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்குச் சென்று தியானத்தில் ஈடுபட உள்ளார்.

இந்த நிலையில், மோடியின் இந்த பயணம் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகக் கூறும் திமுக மற்றும் சிபிஐ(எம்), இப்பயணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எம்.ஜோசப் ராஜ் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, பாஜக என்ற அரசியல் கட்சி சார்பில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, 2024 மே 30, 31 ஆகிய தேதிகளில் பாஜக கட்சி வெற்றி பெற வேண்டும் என்னும் நோக்கில் வாக்காளர்களைக் கவருவதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் தியானம் செய்து விளம்பரப்படுத்த அனுமதித்திருப்பது தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.

இதுமட்டுமல்லாமல், இது போன்ற தேவையற்ற விளம்பர யுக்திகளால் பொதுமக்களுக்கும், அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. எனவே, நரேந்திர மோடிக்கு வழங்கியிருக்கும் அனுமதியை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை ரத்து செய்யுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரதமர் மோடியின் குமரி தியானத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இறுதி பரப்புரை முடிந்து, மே 30ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை புரிந்து, அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் மூன்று நாட்கள் தியானம் செய்வதென நரேந்திர மோடி திட்டமிட்டிருக்கிறார்.

இறுதிகட்ட தேர்தல் நடைபெற இருக்கிற 57 மக்களவைத் தொகுதிகளில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய பிரதமர் மோடி தேர்வு செய்திருப்பதைவிட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது. பதவிக்காக நரேந்திர மோடி எவ்வளவு தரம் தாழ்ந்த நிலைக்கும் செல்வார் என்பதற்கு இந்தத் ‘தியான நாடகம்” ஒரு உதாரணமாகும்.

குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திரமோடி இருந்தபோது ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பகிரங்கமாக படுகொலை செய்யப்பட்டபோது, ரோம் நகர் தீப்பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப்போல கண்டும் காணாமல் இருந்தவர் தான் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி. இளமை காலத்திலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து, மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் கோல்வால்கரின் சிந்தனைத் தொகுப்புகளைப் படித்து வளர்ந்த நரேந்திர மோடியால் சுவாமி விவேகானந்தரின் உரைகளைப் படித்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே படித்திருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிற மனநிலை அவருக்கு இருந்திருக்காது.

அதிகாரவெறி, பகைமை, வெறுப்பு, பொய்மை, மனிதகுலத்தைப் பிளவுபடுத்தும் வஞ்சக புத்தி கொண்ட ஒருவருக்கு மனம் ஒன்றிய தியானம் என்றுமே கிட்டாது. ஆன்மீக மாண்புகளை மீறி மதவெறியால் ஆட்கொள்ளப்பட்டு, ஆரோக்கியமற்ற விரக்தியான மனநிலைக்குச் சென்றுவிட்ட நரேந்திர மோடி, ஆன்மீக ஞானக்கடல் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வது என்பது ஏமாற்று நாடகம்.

சுவாமி விவேகானந்தரின் போதனைகளை ஏற்று அவரைப் போற்றுபவர்கள் எவரும் நரேந்திர மோடியின் தியான முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சுவாமி விவேகானந்தரை இழிவுபடுத்துகிற முயற்சியில் ஈடுபட்டு, அதன்மூலம் இந்து மதத்திற்கே களங்கம் கற்பிப்பவராக நரேந்திர மோடியின் தியான நாடகம் அமைந்திருக்கிறது. இது அரசியல் நோக்கம் கொண்டதே தவிர, ஆன்மீக நோக்கம் கொண்டதல்ல.

மே30 அன்று, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் நரேந்திர மோடி மேற்கொள்ளும் தியான நாடகம், தமிழ்நாட்டிற்கு மட்டும் அவமானமல்ல. இந்தியாவிற்கே அவமானமாகும். நரேந்திர மோடி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தன்னந்தனியாக தியானம் செய்கிற மூன்று நாட்களும் அங்கு சுற்றுலா பயணிகள் எவரும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தடை மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கிற செயலாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கு பிரதமர் மோடிக்குக் கடுகளவும் சட்டப்படி உரிமை இல்லை என்பதை இங்கே உறுதியாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஏழாம் கட்ட இறுதித் தேர்தல் பரப்புரை மே 30ஆம் தேதி மாலையோடு முடிவடைகிற நிலையில், விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து மௌனமாகத் தியானம் செய்வது, பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாக வாக்களிக்கத் தூண்டுகிற பரப்புரையாகவே கருதவேண்டும். இதன்மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஒரு பிரதமரே அப்பட்டமாக மீறுகிற செயலாகும். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தியானம் மேற்கொள்கிற நடவடிக்கைக்குத் தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியிடமும், அதற்கு அனுமதி அளிக்கக் கூடாதென்று தமிழ்நாடு தலைமைக் காவல்துறை அதிகாரியிடமும் நேரில் சந்தித்து வலியுறுத்த தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இன்று கோரிக்கை மனு அளிக்க இருக்கிறோம். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கிற வகையில், பிரதமர் மோடி, விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று கோருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதத்தில், “தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 2024 மே 30 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்வதை தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் பிரதமரின் தியானம் உறுதி.. வெளியான பயண விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.