ETV Bharat / state

நாளை வெளியாகிறதா திமுக வேட்பாளர் பட்டியல்? - அமைச்சர் துறைமுருகன் தகவல்! - DMK candidate list 2024

DMK candidate list 2024: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

minister duraimurugan
minister duraimurugan
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 4:36 PM IST

minister duraimurugan

வேலூர்: கூட்டுறவுத்துறை சார்பில், வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைக்கப்பட்டுள்ள கற்பகம் கூட்டுறவு பெட்ரோல் வழங்கும் நிலையத்தை, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (மார்ச் 13) திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “தமிழகத்தில் சில தனியார் பெட்ரோல் நிலையங்கள் நேர்மையில்லாத வகையில் செயல்படுகிறது. பெட்ரோல் தரத்துடன் இல்லாமல் கலப்படம் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால், அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் கூட்டுறவு பெட்ரோல் நிலையங்கள், மக்களுக்கு தரத்துடன் நியாயமான முறையில் செயல்பட்டு” வருவதாக கூறினார்.

பின்னர், சித்தராமையா தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என தெரிவித்தது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர், “இது வரை கர்நாடகா அமைச்சர்கள் யாராவது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவோம் என தெரிவித்துள்ளார்களா? ஒருபோதும் அவர்கள் கூறியதில்லை. தற்பொழுதும் அப்படிதான் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றுதான் தண்ணீரை பெற்று வருகிறது” என்றார்.

இந்தியாவில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதற்கு, எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்தவர், மாநிலங்களவையில் இந்த சட்டத்தினை எதிர்த்து அவர்கள் வாக்கு செலுத்திருந்தால் இந்த சட்டம் நிறைவேறி இருக்காது” என்றார்.

மேலும், வேட்பாளர் பட்டியல் குறித்த கேள்விக்கு, “திமுகவில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படும்” என்றார். பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டுவது தொடர்பாக, இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு வர இருப்பதால் அதனை வழக்கறிஞர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் தேனி மலை கிராம மக்கள்.. காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.