சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) அறிவித்துள்ளது. ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஜூன் 16) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.