ETV Bharat / state

"ஆசிரியர்களை போராட்டத்தில் பங்கேற்க வற்புறுத்தினால் நடவடிக்கை" - தொடக்கக் கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை! - TN Teachers Protest

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 9:19 AM IST

TN Teachers Protest: மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, ஆசிரியரை போராட்டக்குழு சார்பாக வற்புறுத்துபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தொடக்கக் கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பான கோப்புப்படம்
பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எந்த ஆசிரியரையும் போராட்டக்குழு சார்பாக வற்புறுத்துதல் கூடாது. அவ்வாறு வற்புறுத்துபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தொடக்கக் கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில், 31 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் சுமார் 1 லட்சம் ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள் என டிட்டோஜாக் அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டால் மாணவர்களுக்கு பாடம் எடுக்க ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பார்கள். மேலும், பழைய ஓய்வூதியத் திட்டம், அரசாணை 243 ரத்து, சம வேலைக்கு சம ஊதியம், சரண்டர் விடுப்பு உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பொழுதும் தீர்வு எட்டப்படாததால் இன்று போராட்ட களத்தில் ஆசிரியர்கள் குதித்துள்ளனர்.

இந்த நிலையில். தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நரேஷ் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை எச்சரித்து அறிவிப்பு விடுத்துள்ளார். அதில், "தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (Tetojac) இன்று (செப்.10) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாகத் தெரிவித்துள்ளனர். எனவே, இன்று தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்துப் பள்ளிகளிலும் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் வழக்கம்போல் நடைபெற வேண்டும்.

எந்தவொரு பள்ளியும் ஆசிரியர்களின்றி இயங்காமல் இருக்கக்கூடாது. மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணியில் எவ்வித தொய்வுமின்றி வகுப்புகள் நடைபெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எந்த ஆசிரியரையும் போராட்டக்குழு சார்பாக வற்புறுத்துதல் கூடாது. அவ்வாறு வற்புறுத்துபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அறிவுரைகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவித்து இன்று அனைத்துப் பள்ளிகளும் இயங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்" என அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக்கல்வி), வட்டார கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "ஆசிரியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் திட்டமிட்டப்படி நடைபெறும்" - டிட்டோஜாக் திட்டவட்ட அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.