ETV Bharat / state

பி.எட்., மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பப் பதிவு தொடக்கம் - B Ed Admission 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2024, 1:59 PM IST

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்வியியல் கல்லூரியில் உள்ள 2040 இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு இன்று (செப்.16) முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்வியியல் கல்லூரியில் உள்ள 2040 இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கான அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

அதில், "தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (B.Ed.,) 2024 - 2025ஆம் கல்வி ஆண்டின் முதலாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் இன்று (செப்.16) முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரையில் பதிவு செய்யலாம்.

விண்ணப்பம் பதிவு செய்ய கட்டணமாக ரூ.500 செலுத்தப்பட வேண்டும். SC மற்றும் ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.250 மட்டும் செலுத்தினால் போதுமானது. மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தேர்வு செய்தல் வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை போன்ற விவரங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலமாகவே செலுத்தலாம்.

இதையும் படிங்க: இறந்த மகனின் கனவுக்காக பேரனை தயார்படுத்தும் தாத்தா பாட்டி.. 6 வயதில் உலக சாதனையை நிகழ்த்திய சென்னை சிறுவன்!

இணையதளத்தின் மூலம் செலுத்த முடியாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் 'The Director, Directorate of Collegiate Education, Chennai -15' என்ற பெயரில் 16.09.2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற
வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.

மேலும் இது குறித்த சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின், 044 – 24343106 மற்றும் 044 -24342911 என்ற எண்களில் தொடர்பு கொண்டு, உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் உள்ள 7 அரசுக் கல்லூரிகளில் 900 இடங்களும், 14 அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் 1140 இடங்களும் என மொத்தமாக 2040 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது.

இதுமட்டும் அல்லாது, இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பான பி.எட்., படிப்பில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல், மனை அறிவியல், பொருளாதாரம், வணிகவியல் என 13 பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் பி.எட்., பட்டப்படிப்பில் சேர விரும்புபவர்கள் தங்களுக்கு பிடித்தமான பாடப்பிரிவுகளில் படிப்பதற்கு விண்ணப்பிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.