தருமபுரி: இந்தியா கூட்டணிக் கட்சியின் சார்பில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் மணியை ஆதரித்து தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இலக்கியம்பட்டி, நியூகாலனி, வெண்ணாம்பட்டி, பிடமனேரி, கடகத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சியில் மகளிருக்கு இலவச பேருந்து வசதி, மாணவிகளுக்கு உதவித்தொகை, காலை உணவுத் திட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி, மகளிர் உரிமைத் தொகை என திமுக அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் "பெண்கள் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளைச் சந்தையில் வாங்கும் போது நல்ல காயா, கெட்ட காயா என பார்த்துப் பார்த்து வாங்குகிறீர்கள்.
அதே போல் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டுக்கு யார் நன்மை செய்வார்கள் என்பதை ஒருகணம் சிந்தித்துப் பார்த்து நல்ல வேட்பாளரான மணிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கூறி வாக்கு சேகரித்தார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தொகுதி பொறுப்பாளர் டாக்டர் தருண், ஒன்றிய செயலாளர் சேட்டு, மாணவர் அணி துணை செயலாளர் கௌதம் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல்: தருமபுரியில் பூத் சிலிப் வழங்கும் பணியை தொடங்கி வைத்த ஆட்சியர்! - Dharmapuri Collector Inspection