சென்னை: முதியோருக்கான புதிய பல் நோக்கு மருத்துவமனையில் மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக கேத் ஆய்வகமானது, ஆதம்பாகத்தி்ல் உள்ள ஜெரி கேர் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, அப்லேஷன் மற்றும் பேஸ்மேக்கர், ஐசிடிக்களை பொருத்துதல் உள்ளிட்டவற்றுக்கான சோதனைகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்ள இமேஜிங் உபகரணங்கள் கொண்ட முதல் கேத் ஆய்வகமாக அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜெரி கேர் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் லட்சுமிபதி ரமேஷ் கூறுகையில், "ஜெரி கேர் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள ஜெரியாட்ரிக் கேத் ஆய்வகம் மூத்த குடிமக்களுக்கு, அவர்களின் இதய ஆரோக்கியம் தொடர்பான முக்கியமான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும். மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக கேத் ஆய்வகத்தை சென்னையில் தொடங்கி உள்ளோம்" என்றார்.
இதனைத் தொடர்ந்து மூத்த இதய நிபுணர் முத்துசாமி கூறும்போது, "சென்னையில் உள்ள எங்களின் மூத்த குடிமக்களுக்கான பல் நோக்கு மருத்துவமனையில் கூடுதல் வசதியாக ஜெரியாட்ரிக் கேத் ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது. இனி வயதான நோயாளிகள் ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி போன்ற சோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
தற்போது கேத் ஆய்வக வசதி மூலம் ஒரே இடத்தில் அது கிடைக்கிறது. வயதானவர்களுக்கான இதய சிகிச்சை நிபுணர்கள் மற்றும் நரம்பியல், நுரையீரல், எலும்பியல், கண் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆலோசகர்கள் உள்ளனர்" என தெரிவித்தார்.
மேலும், ஜெரி கேர் மருத்துவமனையில் CBC, HbA1C/RBS, RFT, ECG மற்றும் ECHO ஆகியவற்றுடன் இதய மருத்துவரின் ஆலோசனையுடன் கூடிய மூத்த குடிமக்களுக்கான "Cardiac Health Check Pack" என்ற இதய பரிசோதனை பேக்கேஜும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராமில் 50 சதவீதம வரை தள்ளுபடி கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: '' பெற்ற மகனுக்கு ரூ.2000 கொடுக்கல, 1 கோடிக்கு வீடு''? சவுக்கு சங்கரின் மனைவி பகீர்.. பரபரக்கும் பதிவுகள்! - Savukku Shankar Wife