ETV Bharat / state

சட்னியில் கிடந்த பல்லி.. 3 குழந்தைகள் உள்பட 8 பேருக்கு வாந்தி, மயக்கம் - வாணியம்பாடியில் அதிர்ச்சி சம்பவம் - A Dead lizard Found in Food - A DEAD LIZARD FOUND IN FOOD

A Dead lizard Found in Food: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உணவகத்தில் இட்லி வாங்கி சாப்பிட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லி விழுந்த உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்
பல்லி விழுந்த உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 12:13 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பத்தாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சுபாஷ் என்பவரின் உணவகத்தில் இன்று (ஜூலை 12) இட்லி வாங்கி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, உணவகத்தில் வாங்கி வந்த உணவை சுபாஷின் குடும்பத்தில் 3 குழந்தைகள் உட்பட உறவினர்கள் என 8 பேர் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென குழந்தைக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சுபாஷ் வாங்கி வந்த இட்லியில் பார்த்த போது, அதில் உயிரிழந்த நிலையில் பல்லி இருப்பது தெரியவந்துள்ளது. இதைக்கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உடனடியாக சுபாஷ் மற்றும் அவரது உறவினர்கள் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உணவகத்தில் வைக்கப்பட்ட சட்டினியில் பல்லி இருந்ததாக சுபாஷின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரயில் இன்ஜினில் 5 கி.மீ இழுத்துவரப்பட்ட ஆண் சடலம்.. நெல்லையில் பதறிய பயணிகள்.. நடந்தது என்ன? - Erode sengottai train

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.