ETV Bharat / state

அதிமுக - பாஜக இடையே ரகசிய உறவு தொடர்கிறது - தயாநிதிமாறன்

Dayanidhi Maran: தமிழ்நாட்டிற்கு எதிரானவர்கள் பாஜக என்றால், அதற்கு துணை போனவர்கள் அதிமுக எனவும், அதிமுக - பாஜக இடையே ரகசிய உறவு தொடர்கிறது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.

Dayanidhi Maran has said that secret relationship continues between AIADMK and BJP
அதிமுக - பாஜக இடையே ரகசிய உறவு தொடர்வதாக தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2024, 12:40 PM IST

Updated : Feb 11, 2024, 3:14 PM IST

தயாநிதிமாறன் பேச்சு

கோயம்புத்தூர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை (நவ.27) ஒட்டி, கோவையில் இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு, திமுக விளையாட்டு அணி சார்பில் பரிசளிப்பு விழா, கோவை புதூர் பகுதியில் நேற்று (பிப்.10) மாலை நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதிமாறன், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளையும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், "அமைச்சர் செந்தில் பாலாஜி எதை செய்தாலும் மிகச் சிறப்பாக செய்வார். அவருடைய சிஷ்யனான கோவை வடக்கு மாவட்டத் தலைவர் ரவி, அதே அளவிற்கு விழாவை சிறப்பாக செய்துள்ளார். அதிமுகவும், பாஜகவும் வெற்றி பெற வேண்டுமென, அமைச்சர் செந்தில் பாலாஜியை வேண்டுமென்றே சிறையில் வைத்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பற்றி குறை சொல்லவில்லை. இதுநாள் வரையில் பாஜகவுடன்தான் கூட்டணியில் இருந்தீர்கள். அந்த 5 ஆண்டுகளில் ஒருமுறையாவது நாடாளுமன்றத்தில் வாயைத் திறந்துள்ளீர்களா? ஒரு கேள்வி கேட்டுள்ளீர்களா? ஆனால், பொள்ளாச்சி எம்.பி 216 கேள்விகளைக் கேட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் உரிமைக்காக கிட்டத்தட்ட 38 எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த எம்பி-க்கள் ஒவ்வொருவரும் தமிழகத்திற்காக போட்டி போட்டுக் கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். உதயநிதி விளையாட்டுத் துறை அமைச்சர் ஆனவுடன், உலக அரங்கில் நடைபெறும் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தினார். செஸ், கேலோ இந்தியா போட்டிகளை மாவட்டம் வாரியாக நடத்தியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு பதக்கப் பட்டியலில் இந்திய அளவில் 2-வது இடத்திற்கு வந்துள்ளது. நாம் அனைவரும் சமம், நாம் யாருக்கும் எதிரி இல்லை. பிறப்பால் அனைவரும் சமமே. பாஜக கடந்த 10 ஆண்டுகளாக மதவெறி அரசியலைக் கையாண்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மதவெறி கலாச்சாரம் நடக்காது.

நாம் கட்டும் வரிப் பணத்தை, நமக்கு முழுமையாக மத்திய அரசு கொடுப்பது இல்லை. பால், வெண்ணெய் என எது வாங்கினாலும் வரி கட்ட வேண்டும். நாம் ஒரு ரூபாய் கொடுத்தால், 29 பைசாதான் மத்திய அரசு திரும்பக் கொடுக்கிறது. ஆனால், உ.பி மாநிலம் கொடுக்கும் 1 ரூபாய்க்கு 2 ரூபாய் 17 பைசா கொடுக்கிறது. தமிழ்நாட்டிற்கு எதிரானவர்கள் பாஜக என்றால், அதற்கு துணை போனவர்கள் அதிமுக.

செந்தில் பாலாஜி மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தனர். ஆனால், கூட்டணியை விட்டு வெளியே வந்த பின்னும், எடப்பாடி பழனிசாமி மீதும், எஸ்.பி.வேலுமணி மீதும் ஏன் இன்னும் வருமான வரி, அமலாக்கதுறை சோதனை செய்யவில்லை? அவர்கள் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சூழலில், நாங்கள் வெளியே வந்தது மாதிரி நடிக்கிறோம், நீங்களும் அப்படியே நடியுங்கள் என இரு கட்சிகளும் ரகசிய உறவு வைத்துள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: இன்று சென்னை வருகிறார் ஜெ.பி.நட்டா.. ஓபிஎஸ் உடன் சந்திப்பு நடத்த திட்டமா?

Last Updated : Feb 11, 2024, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.