தருமபுரி: தருமபுரியை சேர்ந்த சில இளைஞர்கள் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கி தொடர் ரீலிஸ்களை குவித்து வருகின்றனர். அதில் பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தருமபுரி வழியாக ஓசூர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தங்களது இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வீலிங் செய்து வீடியோ எடுத்து தினந்தோறும் ஒரு ரீல்ஸ் விடியோவை வெளியிட்டு வருகின்றனர்.
பாலக்கோடு செல்லும் வழி கோவிலூர் மற்றும் இருதயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட இந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இளைஞர்கள் வாகனத்தில் உள்ள நம்பர் பிளேட்டுகளை கழட்டி விட்டு சாலை விதிகளை மீறி மிக வேகமாக, தலைகவசம் இன்றி பொது இடங்களிலும், நெடுஞ்சாலைகளிலும், மகளிர் கல்லூரி பேருந்து செல்லும் போதும் வீலிங் செய்வதால் அருகில் வரும் வாகன ஓட்டிகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆள்ளாக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றசாட்டு வைக்கின்றனர்.
இதையும் படிங்க: லைக்ஸ் வாங்க பெண் வேடமிட்டு பைக் சாகசம் செய்த இளைஞர்.. வேலூர் சம்பவம்!
மேலும் இந்த குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வீடியோக்களை 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ரீல்ஸ் பதிவிடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கணக்கு நேற்று முதல் பிரைவேட் செய்து உள்ளனர். எனவே இந்த பத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தக்க அறிவுரை கூற வேண்டும் என இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்