தேனி: சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தேனியில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. தேனி மாவட்ட காவல்துறை மற்றும் தனியார் சைக்கிள் நிறுவனம் சார்பில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணியை தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜுவனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேரணி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி அன்னஞ்சி விலக்கு வழியாக தனியார் சைக்கிள் நிறுவனத்தை இறுதியாக வந்தடைந்தது. சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு போதைப் பொருள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றனர்.
இந்த சைக்கிள் பேரணியில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் இணைந்து தேனி கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் சுகுமார் மற்றும் தேனி துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டிச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சைக்கிள் பேரணியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சைக்கிள் நிறுவனம் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : பெண்களுக்கான விடுதலை வாக்கத்தான்.. மதுரையில் களைக்கட்டிய 78ஆவது சுதந்திர தினம் கொண்டாட்டம்..! - 78th Independence Day