ETV Bharat / state

வயநாடு நிலச்சரிவில் பாட்டி - பேத்தியைக் காப்பாற்றிய யானை.. கோவை கலைஞர் நெகிழ்ச்சி வடிவமைப்பு! - Wayanad Elephant statue - WAYANAD ELEPHANT STATUE

ELEPHANT RESCUE WOMAN IN WAYANAD: வயநாடு நிலச்சரிவில் சிக்கிய பாட்டி மற்றும் பேத்தியை 3 யானைகள் காப்பாற்றிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில், அந்த சம்பவத்தை கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர் களிமண்ணால் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.

களிமண் சிலை
களிமண் சிலை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 6:54 PM IST

Updated : Aug 3, 2024, 7:10 PM IST

கோயம்புத்தூர்: வயநாடு நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி 5வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாட்டியையும் பேத்தியையும் யானைகள் பாதுகாத்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளரான UMT ராஜா அந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில், பாட்டி மற்றும் சிறுமியை யானை பாதுகாப்பது போல களிமண்ணில் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.

கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக, வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தன. இந்த கோர சம்பவத்தால் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் உள்ளனர்.

சம்பவத்தன்று, நிலச்சரிவு ஏற்பட்ட நேரத்தில் உயிரை காப்பற்றுவதற்காக தனது பேத்தியை தூக்கிக் கொண்டு வனப்பகுதிக்குள் ஓடியுள்ளார் மூதாட்டி சுஜாதா. அப்போது, அடர் வனப்பகுதிக்குள் 3 காட்டு யானைகள் இருந்துள்ளது. இந்நிலையில், நாங்களே பெரிய துயரத்திலிருந்து தப்பி வந்திருக்கிறோம், எங்களை ஒன்றும் செய்யாதே என்று யானையிடம் கூறியுள்ளார்.

அதனையடுத்து, காட்டுயானை இருவரையும் ஒன்றும் செய்யாமல் தங்களுக்கு காவலாக இருந்ததாகவும், மறுநாள் மீட்புத் துறையினர் வரும்வரை தங்கள் அருகிலேயே பாதுகாப்பாக நின்று, பின்னர் அங்கிருந்து சென்றதாக மூதாட்டி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தால் நெகிழ்ச்சியடைந்த கோயம்புத்தூர் UMT ராஜா, களிமண்ணில் இந்தச் சம்பவத்தை தத்ரூபமாக வடிவமைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கஜமுகன் (யானை) போன்று மனிதர்களும் அன்புடன் இருக்க வேண்டும், மனிதநேயம் காக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது" என தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: நிலச்சரிவில் தப்பி யானைக் கூட்டத்தின் முன் அந்த நொடி.. மெய்சிலிர்க்கும் வயநாடு மூதாட்டியின் அனுபவம்! - Wayanad Family escape help Elephant

Last Updated : Aug 3, 2024, 7:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.