ETV Bharat / state

இலங்கை கடற்படையினரின் படகு மோதி மீனவர் உயிரிழப்பு; உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்! - CM Stalin letter to Jaishankar

CM Stalin letter to Central Minister Jaishankar: இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப் படகு மோதியதில் உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடலை உடனடியாக தமிழகம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடற்கரை, முதலமைச்சர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 8:13 PM IST

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் மீன்பிடி விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியது. இந்த சம்பவத்தில் மலைச்சாமி (59) என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அத்துடன் உயிரிழந்த மீனவரான மலைச்சாமி குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடலை உடனடியாக தாயகம் கொண்டுவரவும், காயமடைந்த மீனவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி, அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வரவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 1) கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில், “கடந்த ஜூலை 31ஆம் தேதி அன்று IND-TN-10-MM-73 என்ற பதிவெண் கொண்ட இந்திய மீன்பிடிப் படகின் மீது இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப் படகு மோதிய துயர சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த கவலையையும், வேதனையையும் வெளிப்படுத்தியுள்ள முதலமைச்சர், இத்துயரச் சம்பவத்தில் ஒரு மீனவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர் என்றும், ஒரு மீனவரை காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற நிகழ்வுகளில் இந்திய மீனவர்கள் உயிரிழப்பது இதயத்தை நொறுக்குகிறது. மேலும் இவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இச்சம்பவம் மீனவ சமூகத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தை இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எடுத்துச் செல்ல வேண்டும். இச்சம்பவத்தில் உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.

அதேபோல், காயமடைந்துள்ள இரண்டு மீனவர்கள் குறித்து இலங்கை அதிகாரிகளிடம் பேசி மீட்டுத் தர வேண்டும். அதற்கு அவர்களுக்கு தேவையான தூதரக உதவிகளை வழங்கிடவும், போதிய மருத்துவ வசதிகளை வழங்கிடவும், அதோடு அவர்களை மிக விரைவில் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “நமது பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதிகளில் இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி மேற்கொள்ளும் இதுபோன்ற அத்துமீறல்கள், மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான பாக் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுக்கும் வகையில் உள்ளது.

இதனை கடந்த காலங்களில் பலமுறை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன், எனவே இந்த விஷயத்திற்கு அதிகபட்ச முன்னுரிமை அளித்து தூதரக நடவடிக்கையின் மூலம் உரிய தீர்வு காண வேண்டும்” எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு: சென்னையில் மெழுகுவர்த்தி ஏந்தி பள்ளி மாணவ, மாணவிகள் அஞ்சலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.