சென்னை: சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஜீவா. இவர் மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கோடை விடுமுறையில் இருந்து வந்த இவர், இன்று காலை சென்னை மதுரவாயல் பாலத்தின் கீழே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி, இருசக்கர வாகனத்தை மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஜீவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் மற்றும் குற்றவியல் போலீசார், அவரது உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியை ஒட்டி வந்த ஓட்டுநர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பிச் சென்று விட்டார். தற்போது லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றுள்ள போலீசார், அதன் நம்பரைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிக மதிப்பெண்கள் எடுத்தும் பிளஸ் 2 மாணவர் தற்கொலை.. தேனியில் நடந்த சோகம்!