ETV Bharat / state

குடும்பத் தகராறில் 3 வயது மகனை ஏரியில் வீசிய தந்தை.. சென்னையில் நடந்த கொடூரம்! - Child thrown in lake - CHILD THROWN IN LAKE

Child thrown in lake: சென்னையில் குடும்பத் தகராறில் பெற்ற மகனை தந்தை ஏரியில் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போரூர் ஏரி
போரூர் ஏரி (Photo credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 10:54 PM IST

சென்னை: சென்னை தாம்பரம் - மதுரவாயல் இடையேயான புறவழிச்சாலையில் உள்ள போரூர் ஏரியின் மேல் பகுதியில் உள்ள சாலையில், இருசக்கர வாகனத்தில் சிறுவனுடன் ஒருவர் வந்துள்ளார். பின்னர், திடீரென இருசக்கர வாகனத்தின் முன்பு அமர வைத்திருந்த சிறுவனை தூக்கி போரூர் ஏரியில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதனைக் கண்ட ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர்கள், நீந்திச் சென்று ஏரியில் வீசப்பட்ட சிறுவனை உயிருடன் மீட்டுள்ளனர். பின்னர், இது குறித்து போரூர் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு போலீசார் வந்ததை அடுத்து சிறுவனை போலீசாரிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுவனை ஏரியில் வீசிச் சென்றது அவனது தந்தை என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அந்த நபர் தலைமைச் செயலக காலனியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பதும், தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனைவியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, தனது 3 வயது மகன் தர்ஷனை போரூர் ஏரியில் வீசியது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அயனாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அயனாவரம் போலீசார் மீட்கப்பட்ட சிறுவனை அழைத்துச் சென்றனர். இந்நிலையில், மகனை ஏரியில் வீசிச் சென்ற கொடூர தந்தையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கொடிவேரி அணையில் நீண்ட நேரம் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.