ETV Bharat / state

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றமா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் - Tamil Nadu cabinet

Tamil Nadu cabinet: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தனக்கு அதுகுறித்த எந்த தகவலும் வரவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Credit - TN DIPR)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 12:33 PM IST

சென்னை: சேப்பாக்கத்தில் ரூ.5 கோடி செலவில் தரம் உயரத்தப்பட்ட மாநில அவசர கால பேரிடர் மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சரிடம், அமெரிக்க பயணம், முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்டவை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

பின்னர், அமைச்சரவை மாற்றப்படவுள்ளதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "எனக்கு எந்த தகவலும் வரவில்லை" என பதிலளித்துள்ளார்.

முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாலை மாற்றப்பட உள்ளதாகவும், அதில் மூத்த அமைச்சர் உட்பட மூவரது பதிவிகள் பறிக்கப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:160 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட உலகின் 2வது பெரிய நீதிமன்றம்.. சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாறு அறிவோம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.