ETV Bharat / state

5 நாட்களில் ரூ.6 லட்சம் வசூல்.. ஸ்டிக்கர் ஒட்டும் வாகன ஓட்டிகளுக்கு மீண்டும் எச்சரிக்கை! - PENALTY VEHICLE STICKERING - PENALTY VEHICLE STICKERING

Penalty for vehicle stickers: ஸ்டிக்கர் ஒட்டியிருந்த வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் அளித்துள்ளனர்.

வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து காவல் துறை புகைப்படம்
வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து காவல் துறை புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 6:54 PM IST

சென்னை: சென்னை மாநகரின் வாகனம் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்களை குறைக்கும் பொருட்டு, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, சமூக விரோதிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ஹவாலா பணப் பரிமாற்றத்தில் போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர், தங்களது வாகனங்களில் போலீஸ், ஊடகம், தலைமைச் செயலகம், டி.என்.இ.பி என ஸ்டிக்கர் ஒட்டி தப்பிப்பதாக தகவலறிந்த போக்குவரத்து காவல்துறையினர், முதற்கட்டமாக வாகனப் பதிவு எண் தகட்டில், ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களை மடக்கி சோதனை செய்தனர்.

கடந்த 5 நாட்களில், அதாவது மே 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி மாலை வரை நடத்திய சோதனையில் 1,200 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி வாகனப் பதிவு எண் தகட்டில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததாக 1,022 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து, தலா ரூ.500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி, 5 நாட்களில் 1,200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.6 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகன தகட்டில் ஒட்டப்பட்டு இருந்த ஸ்டிக்கர்களும் அகற்றப்பட்டது. இந்த வாகன ஓட்டிகள் அடுத்த முறையும் விதிகளை மீறி, ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால், 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

தற்போது பிடிபட்டவர்கள் மட்டுமல்ல, வேறு யாராக இருந்தாலும், வாகன பதிவு எண் தகட்டில், தேவையற்ற எந்த ஸ்டிக்கரையும் ஒட்டக்கூடாது. மேலும், அந்த தகட்டில் பதிவு எண்கள் மட்டுமே இருக்க வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் மீது புதிதாக வழக்குப்பதிவு.. சென்னை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை! - Savukku Shankar Cases

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.