ETV Bharat / state

சென்னை தி.நகர் பகுதியில் இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்! - Chennai traffic diversion - CHENNAI TRAFFIC DIVERSION

Traffic Changes in Chennai: சென்னை தியாகராய நகரின் தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு சாலை வரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் காரணமாக, இன்று (சனிக்கிழமை) முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 10:36 AM IST

சென்னை: சென்னை மேட்லி சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் வரை 27.04.2024 (இன்று) முதல் 26.04.2025 வரையிலான ஒரு ஆண்டுக்கு மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளதால், மாற்றுப்பாதையில் பயணிக்குமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் அறிவித்துள்ளது.

சென்னையில் முக்கிய சாலைகளில் அடுத்த ஓராண்டுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள தகவல் பின்வருமாறு:-

  • 'மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றுப்பாதைகள் செயல்படுத்தப்படும்: வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ்) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராய சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம்.
  • பர்கிட் சாலை மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு. மூசா தெரு. தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம்.
  • தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம்.
  • சிஐடி நகர் 1வது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம்.
  • தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டனாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கொல்கத்தா ஏர்போர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: சென்னை ஏர்போர்ட்டில் 5 பாதுகாப்பு - Security Tight At Chennai Airport

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.