ETV Bharat / state

வழிப்பறி செய்வது எப்படி? வீடியோ பார்த்து மூதாட்டியிடம் செயின் பறித்த இளைஞர் கைது! - Chain Snatching - CHAIN SNATCHING

Chain Snatching: தாம்பரம் அருகே ஆன்லைனில் வீடியோக்கள் பார்த்து மூதாட்டியிடம் செயின் பறித்த சம்பவத்தில் பொறியியல் பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட அருணாச்சலம்
கைது செய்யப்பட்ட அருணாச்சலம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 1, 2024, 2:23 PM IST

சென்னை: தாம்பரம் அருகே மூதாட்டியிடம் செயின் பறித்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் இன்ஜினியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜபுரம், நேதாஜி தெருவை சேர்ந்தவர் சீதாலட்சுமி (70). இவரிடம் சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் இரண்டு சவரன் தங்கச் செயினை பறித்து சென்றுள்ளார். அதே போன்று, கிழக்கு தாம்பரம், ஆஞ்சநேயர் தெருவைச் சேர்ந்த நித்திய சுபா (49) என்பவரிடமும், மர்ம நபர் ஒருவர் 5 சவரன் தங்கச் செயினை பறித்து சென்றுள்ளார்.

இந்த சம்பவங்கள் குறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த மர்ம நபர், காமராஜபுரம், மப்பேடு, அகரம், பெருங்களத்தூர், முடிச்சூர், படப்பை என சென்று இறுதியாக மடிப்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற தனிப்படை போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், கோவில்பட்டியை சேர்ந்த அருணாச்சலம் (27). இவர் மடிப்பாக்கம், ராம்நகர் பகுதியில் வசித்து வருகிறார். இன்ஜினியரிங் முடித்து வேலை கிடைக்காததால் ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் செலுத்தியுள்ளார்.

அதில் இரண்டு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, அவரது தங்கையின் 10 சவரன் நகைகளை வங்கியில் வைத்து பெற்ற பணத்தில் மீண்டும் ஆன்லைன் வர்த்தகத்தில் செலுத்தியுள்ளார். அதிலும் நஷ்டம் என மொத்தமாக சுமார் ரூ.15 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர், ரேபிடோவில் பைக் ஓட்டி வந்துள்ளார்.

இதனையடுத்து, தனது ஜாதகம் குறித்து ஆன்லைனில் பார்த்த நிலையில், ஏராளமான செயின் பறிப்பு வீடியோக்களையும் பார்த்துள்ளார். அதன் அடிப்படையில், செயின் பறிப்பில் ஈடுபடலாம் என முடிவு செய்த அவர் சாலைகளில் தனியாக செல்லும் பெண்களை நோட்டுமிட்டு செயின் பறித்துள்ளார். அதன்படி, சீதாலட்சுமி மற்றும் நித்தியசுபா ஆகிய இருவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

மேலும், பெண்களிடம் இருந்து பறித்த தங்க நகைகளில் 5 சவரன் நகையை தனது தங்கையின் திருமணத்திற்காக வீட்டில் கொடுத்ததும், மீதமுள்ள இரண்டு சவரன் நகையை தனியார் கோல்ட் பினான்ஸ் நிறுவனத்தில் வைத்து பணம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், வரும் 10ஆம் தேதி இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். திருமணம் நிச்சயம் நடைபெற உள்ள நிலையில் செயின் பறிப்பில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காக்களூர் சிப்காட்டில் பயங்கர தீ விபத்து: 3 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! மற்றவர்களின் நிலை என்ன? - Kakkalur Sipcot Fire Accident

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.