ETV Bharat / state

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் பட்டியலின தம்பதி அன்னதானம் வழங்க மறுப்பு.. தருமபுரியில் நடந்தது என்ன? - Erulapatti Temple Almsgiving issue - ERULAPATTI TEMPLE ALMSGIVING ISSUE

Erulapatti Temple Almsgiving issue: தருமபுரி மாவட்டம், இருளப்பட்டி காளியம்மன் கோயில் திருவிழாவில் அன்னதானம் வழங்க முன்வந்த பட்டியலின தம்பதிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இருளப்பட்டி கோயில்
இருளப்பட்டி கோயில் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 5:45 PM IST

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள புகழ்பெற்ற இருளப்பட்டி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு தருமபுரி, சேலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்காக அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் எப்பொழுதும் இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணமே இருக்கும். பிரசித்தி பெற்ற இந்த ஆலயம், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

பட்டியலின தம்பதி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அனைத்து சமூக மக்களும் வந்து செல்லும் வகையில் இந்த ஆலயம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேர்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த பட்டியல் இன குறவர் சமூகத்தைச் சேர்ந்த தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை இல்லாததால், இந்த ஆலயத்தில் குழந்தை வரம் கேட்டு வேண்டியுள்ளனர்.

அதன்படி, இவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு நேர்த்திக்கடனாக, தற்போது நடைபெற்று வரும் திருவிழாவில் 2,500 பக்தர்களுக்கு உணவு சமைத்து அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். இந்த நிலையில், சில மாற்று சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஆலயப் பகுதியில் நீங்கள் அன்னதானம் வழங்கக் கூடாது, வேறு எங்காவது எடுத்துச் செல்லுங்கள் என காவல்துறை உதவியுடன் இந்த தம்பதியை மிரட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அந்த தம்பதி அருகில் உள்ள அரங்கத்தை வாடகைக்கு எடுத்து உணவு சமைத்துள்ளனர். அப்போது காவல் துறையினர், “இன்று நீங்கள் (குறவர் சமூகம்) அன்னதானம் வழங்கக் கூடாது. வேறு சமூகத்தினர் அன்னதானம் வழங்கும் நாள். நீங்கள் எடுத்துச் செல்லுங்கள்” என தடுத்துள்ளனர். ஆனால், இந்த தம்பதியினர் காவல்துறையிடம் முறையிட்டுள்ளனர். இருப்பினும் காவல் துறையினர் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து அறிந்த இருளப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் குமார், பொதுக் கோயிலில் யார் வேண்டுமானாலும் அன்னதானம் வழங்கலாம், இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த தம்பதி அன்னதானம் வழங்கிவிட்டுச் சென்றனர். இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயிலில், பட்டியலினத் தம்பதியை அன்னதானம் வழங்கக் கூடாது என ஒரு சிலரும், காவல்துறையும் தடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து கோயில் நிர்வாக அமைப்பினர் கூறுகையில், “அனைத்து சமுதாய மக்களும் இணைந்து 10 நாட்கள் நடைபெறுகின்ற திருவிழாவில், ஒவ்வொரு நாளும் ஒரு சமூகத்தினர் உபயம், அன்னதானம் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் வியாழன் அன்று குறவர் சமூக மக்களுக்கு உபயம் வழங்கவும், திங்களன்று மாற்று சமுதாயத்தினர் வழங்கவும் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒதுக்கப்பட்ட நாட்களில் மட்டுமே அன்னதானம், உபயம் போன்றவற்றை வழங்க வேண்டும். வேறு ஒரு நாட்களில் மற்றொரு சமூகம் வழங்குகின்ற பொழுது, உபயம் அன்னதானம் வழங்கினால், தேவை இல்லாமல் சலசலப்பு ஏற்படும் என்பதை தவிர்க்கவே ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு நாள் என ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவர்கள் ஒதுக்கப்பட்ட நாளை தவிர்த்துவிட்டு, முன்னதாகவே அன்னதானம் வழங்க வந்ததால், அவர்களை வேண்டாம் என தெரிவித்தோம். அதன் பிறகு கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் அன்னதானம் வழங்க அறிவுறுத்தி அன்னதானம் வழங்கப்பட்டது” என தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய தம்பதி கூறுகையில், “இருளப்பட்டி காளியம்மன் கோயில் கும்பிடுக்கை செலுத்துவதற்காக வந்திருந்தோம். எந்த ஊர் என்று ஊரை விசாரித்தார்கள். எங்கள் பெற்றோர் ஊர் அருகே உள்ள காளிபுரம். ஊத்தங்கரையில் திருமணம் செய்து அங்கு வசிக்கிறேன் என்றவுடன், அவர்கள் இந்த சமூகம், இன்று இங்கு செய்யக்கூடாது என்று கூறினார்கள்.

நான் சமூகமாக வரவில்லை, தனிப்பட்ட கும்பிடுக்கை செலுத்தவே வந்தேன். எனது வேண்டுதல் நிறைவேறி விட்டது. அதனால் அன்னதானம் செய்ய வந்தேன் என்று கூறினேன். இன்று எந்த சமூகம் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நீங்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதானால் செய்யக்கூடாது, சமையல் பொருட்களை எடுத்து வெளியேறுங்கள் என்று மாற்று சமூகத்தினர் தெரிவித்தார்கள். காவல்துறையினரும் சமையல் பொருட்களை அங்கிருந்து எடுக்க எங்களை அறிவுறுத்தினார்கள்.

சமையல் செய்பவர்கள் சமையல் பணியை நிறுத்திவிட்டார்கள். மாற்று வாகனத்தை வரவழைத்து போலீசார் சமையல் பொருட்களை வாகனத்தில் ஏற்றி விட்டனர். அன்னதானம் தானே செய்ய வந்தோம். இதைக்கூட செய்ய தடை செய்கிறார்கள்” என்று தனது வேதனையை தெரிவித்தார்.

join ETV Bharat WhatsApp channel click here
join ETV Bharat WhatsApp channel click here (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: “கவனக்குறைவே காரணம்”.. ஆவின் பெண் ஊழியர் விவகாரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ்! - Mano Thangaraj on Aavin Labour

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.