ETV Bharat / state

ஒரே குடும்பத்தில் டாக்டராகும் அக்கா, தம்பி..திருநெல்வேலி அரசுப் பள்ளி மாணவர்கள் சாதித்தது எப்படி? - TIRUNELVELI GOVT MBBS STUDENT

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 10:37 PM IST

NEET Exam: திருநெல்வேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா தம்பி ஆகிய இருவரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு அரசு 7.5 உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

திருநெல்வேலியில் மருத்துவ படிப்புக்கு தேர்வான சஜா, முகமது அனஸ்
திருநெல்வேலியில் மருத்துவ படிப்புக்கு தேர்வான சஜா, முகமது அனஸ் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட தொடக்கத்தில் அத்தேர்வு மிகவும் கடினம் என கூறப்பட்டது. குறிப்பாக நீட் தேர்வு அறிமுகமான ஒரிரு ஆண்டுகள் சிபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களே அதிகம் வெற்றி பெற்றனர்.

சஜா, முகமது அனஸ் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஆனால், தற்போது அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு அரசு பள்ளி மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவு தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.

நீட் தேர்வில் வெற்றி பெறும் ஏழை மாணவர்களுக்கு வரப் பிரசாதமாக தமிழக அரசு 7.5 சதவீதம் இட ஒதுக்கிடை கொண்டுவந்துள்ளது. இதனால், பல்வேறு மாணவர்கள் தங்கள் மருத்துவக் கனவை பூர்த்தி செய்து வருகின்றனர். தமிழக அரசின் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில், இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் பல்வேறு ஏழை மாணவர்கள் மருத்துவ மாணவராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருநெல்வேலியில் ஒரே வீட்டில் அக்கா, தம்பி இருவரும் ஒரே நேரத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் தேர்வாகியுள்ளனர். திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் மசூத். கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் சஜா மற்றும் மகன் முகமது அனஸ். இவர்கள் இருவரும் மேலப்பாளையம் காயிதே மில்லத் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றுள்ளனர்.

கடந்த 2022-ல் இருவரும் ஒரே நேரத்தில் பிளஸ் 2 முடித்துவிட்டு மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில் நீட் தேர்வுக்கு தயாராகியுள்ளனர். அதற்காக அகாடமியில் சேர்ந்து இருவரும் படித்துள்ளனர். அதன் எதிரொலியாக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். நீட் தேர்வில், முகமது அனஸ் தரவரிசையில் 139 ஆவது இடமும், அவரது அக்கா சஜா 315 வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதன் மூலம் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சஜாவிற்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியிலும், முகமது அனஸ்சுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும் சீட் கிடைத்துள்ளது.

இது குறித்து சஜா ஈடிவி பாரத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, “கடந்த ஒரு ஆண்டாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தேன். முதல் தேர்வில் மதிப்பெண் குறைந்து விட்டது. தற்போது அதிக மதிப்பெண் கிடைத்திருப்பதால் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் எனக்கு திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இடம் கிடைத்துள்ளது. நீட் தேர்வு கடினம் கிடையாது. உரிய முறையில் படித்தால் அனைவரும் வெற்றி பெற முடியும்” என்றார்.

அதனைத்தொடர்ந்து, மாணவர் முகமது அனஸ் கூறுகையில், “ நீட் தேர்வு கடினம் கிடையாது. அனைவரும் திட்டமிட்டு படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். திட்டமிட்டு படித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். ஒரே நேரத்தில் நாங்கள் இருவரும் மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. எனக்கு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது” என்றார்.

இதனையடுத்து, இது குறித்து மசூத் கூறுகையில், “தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினால் எனது இரண்டு குழந்தைகளுக்கும் மருத்துவ இடம் கிடைத்துள்ளது. அரசு பள்ளியில் படித்தாலும் சாதிக்க முடியும். எனவே பெற்றோர்கள் அரசு பள்ளியை நம்பி படிக்க வையுங்கள். நீட் தேர்வு 7.5 சதவீத இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் என் குழந்தைகளுக்கு மருத்துவ சீட்டு கிடைத்திருக்குமா என்றால் அது யோசிக்க வேண்டிய செயல்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதே போல் அக்கா, தம்பி இருவரும் படித்த அதே காயிதே மில்லத் மாநகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி ஷாமிளாவும் நீட் தேர்வில் வெற்றி பெற்று கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சீட் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: 7.5 இட ஒதுக்கீட்டில் ஒரே குடும்பத்தில் 3 மருத்துவர்கள்.. தருமபுரி அரசுப் பள்ளி மாணவர்கள் சாதித்தது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.