ETV Bharat / state

"கோயிலைக் காட்டி மக்களை மயக்கி விடலாம் என பாஜக நினைக்கின்றது" - மதிமுக தலைவர் வைகோ!

MDMK Vaiko Byte: கோயிலைக் காட்டி மக்களை மயக்கி விடலாம் என்கின்ற அந்த உணர்வோடும் இங்கே பாஜக அரசு மீண்டும் வரவேண்டும் என அவர்கள் முயற்சித்து வருகின்றனர். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என மதிமுக தலைவர் வைகோ தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2024, 7:56 PM IST

"கோவிலை காட்டி மக்களை மயக்கி விடலாம் என பாஜக நினைக்கின்றது" - மதிமுக தலைவர் வைகோ!

திருச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் தலைமையில் வெல்லும் சரணாக மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காகச் சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த மதிமுக தலைவர் வைகோவைக் கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மதிமுக தலைவர் வைகோ, "இந்திய நாட்டின் அரசியலில் நெருக்கடிக் காலத்துக்குப் பின்னர் மாபெரும் மாற்றமும் திருப்பமும் ஏற்படக்கூடிய சூழலில் நாடாளுமன்றத் தேர்தலை இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தியா சந்திக்கப் போகிறது.

இந்தியா என்று சொல்லும் பொழுது அந்த இந்தியா என்ற அமைப்புகளில் பங்கெடுத்துக் கொண்டு இருக்கக்கூடிய கட்சிகள் எல்லாம் ஒற்றுமையாக இருந்து அனைத்து இடங்களிலும் பணத்தின் பலத்தாலும், அதிகார பலத்தாலும், தவறான பிரச்சாரத்தின் பலத்திலும், கோயிலை காட்டி மக்களை மயக்கி விடலாம் என்கின்ற அந்த உணர்வோடும் இங்கே பாஜக அரசு மீண்டும் வரவேண்டும் என அவர்கள் முயற்சித்து வருகின்றனர். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.

இந்தியக் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். தமிழகம், பாண்டிச்சேரி சேர்த்து 40 தொகுதிகளும் வெற்றி பெறுவதோடு மற்ற மாநிலங்களிலும் அப்படி வெற்றி பெறுகிற போது நிச்சயமாக பாஜக அல்லாத ஒரு அரசு அமையும். அது கூட்டாட்சி தத்துவத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றுகின்ற அரசாக இருக்கும்" என்றார்.

தொடர்ந்து, இந்தியக் கூட்டணியிலிருந்து பஞ்சாப் ஆம் ஆத்மி மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மம்தா பனர்ஜி வெளியேறுவதாகக் கூறுகின்றனர் என்ற கேள்விக்கு, "30 கட்சிகள் ஒரு இடத்தில் இருக்கும் பொழுது சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும், அது சரியா போய்விடும் எனத் தெரிவித்தார்.

இந்தியக் கூட்டணியில், பிரதமர் தேர்ந்தெடுப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படுமா? என்ற கேள்விக்கு, "இது புதிய பரிமாணம். எமர்ஜென்ஸிக்கு பிறகு பிரதமர் யார் என்று அந்த தேர்தலில் சொல்லவில்லை. ஜேபி எல்லோரையும் அழைத்து வைத்துப் போராடி பிரதமர் ஆக்கினார். அதேபோல், இது அடுத்த பரிசோதனை. இதில், வெற்றி பெறுவோம்.

கர்நாடகாவில் சிவக்குமார் மேகதாதுவில் அணை கட்டுவோம் என சொல்லி வருகிறார். மாநிலங்கள் மட்டுமல்ல மத்திய அரசில் பங்கு பெற்றுள்ள அமைச்சர்களும் மேகதாது அணை கட்ட பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என பல காலமாகச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். ஆனால், பசுமை தீர்ப்பாயத்திலே நான் வழக்குத் தொடுத்தேன் அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது நிச்சயமாக அணை கட்ட விடமாட்டோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்த் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு பத்ம விருதுகள்.. முழு பட்டியல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.