திருச்சி: ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நாட்டின் 18வது நாடாளுமன்றத் தேர்தல் முதல் கட்டமாக, தமிழகத்தில் இம்மாதம் 19ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தொகுதிகளிலும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகத்தில் அரியலூர், கரூர், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பிரசாரம் மேற்கொண்டார். மேலும், பாஜக தலைமையிலான கூட்டணியில் அமமுக சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் செந்தில்நாதனை ஆதரித்து சாலை பேரணி (JP Nadda Road Show) நடத்தினார்.
முன்னதாக நேற்று காலையில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பி.கார்த்தியாயினியை ஆதரித்து அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றினார். அதன் திருச்சி வந்த அவர் பாஜக கூட்டணியில் இருக்கும் அமமுக வேட்பாளரை ஆதரித்து வாகனப் பேரணி மேற்கொண்டார்.
வாகனப் பேரணி மேற்கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு சாலையின் இரு புறமும் இருந்த தொண்டர்கள் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். மாலை 7 மணி அளவில் கண்ணப்பா உணவகம் பகுதியில் இருந்து, உறையூர் நாச்சியார் கோயில் வரை இந்த வாகனப் பேரணி நடைபெற்றது.
இதனிடையே, இரவு 8 மணிக்குள் வாகனப் பேரணியை முடிக்க வேண்டும் என நீதிமன்றம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு சில வார்த்தைகள் மட்டும் கூறி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். அப்போது, "மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும் என மக்களிடையே கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, ஜே.பி.நட்டாவின் சாலை பேரணியை காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து மலைக்கோட்டை நடத்த பாஜக தரப்பில் அனுமதி கேட்டிருந்தனர். அதனை அடுத்து அப்பகுதியில் உள்ள கோயிலில் நடக்கும் விழாவை காரணம் கட்டி அனுமதி மறுக்கப்பட்டது. அதனை அடுத்து பாஜக தரப்பில் நீதிமன்றத்தை நாடியதை அடுத்து, வேறு இடத்தில் மாற்று பாதையில் சாலை பேரணி ரோட் ஷோ நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், இந்த சாலை பேரணியின் போது பாஜக மற்றும் அதன் தலைமையிலான கூட்டலில் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமான பங்கேற்றனர். மேலும், பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
இதையும் படிங்க: "சனாதனத்தை இழிவுபடுத்துபவர்களுக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது" - கரூரில் ஜெ.பி.நட்டா பேச்சு