ETV Bharat / state

“சட்டப்பூர்வமாக ஊழல் செய்வதை உலகத்திற்கே பாஜக கற்றுக் கொடுத்துள்ளது” - கனிமொழி பேச்சு! - Kanimozhi election campaign - KANIMOZHI ELECTION CAMPAIGN

Kanimozhi election campaign: இந்த தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால், நாட்டில் அடுத்து தேர்தலே நடக்காது என்றும், பாஜக தலைமையிலான சர்வாதிகார ஆட்சிதான் இருக்கும் என்றும் கனிமொழி கூறியுள்ளார்.

Kanimozhi election campaign in Valliyur
Kanimozhi election campaign in Valliyur
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 3:32 PM IST

திருநெல்வேலி: தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே, அரசியல் கட்சியினர் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அந்த வகையில், திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, நெல்லை அடுத்த வள்ளியூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "இந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒரு சுதந்திரப் போராட்டம் என்று எண்ணக்கூடிய அளவிற்கான ஒரு தேர்தல்.

இந்த தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது. ஆனால் அப்படி ஒரு விபத்து நேர்ந்து விட்டால், இதுதான் இந்தியாவில் நடக்கும் கடைசி தேர்தல் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், நாட்டில் சர்வாதிகாரம் மட்டும்தான் மிஞ்சி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.

மேலும், "தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த போது தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அப்போது பிரதமர் வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை. மத்திய நிதியமைச்சரை இங்கு அனுப்பினார். பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட்டுச் சென்றார். இருப்பினும், ஒத்த ரூபாய் கூட நிதி தரவில்லை.

தற்போது தேர்தல் நெருங்கியதை முன்னிட்டு, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை பிரதமர் தமிழ்நாடு வருகிறார். வாரத்திற்கு 8 நாள் இருந்தால் 8 நாளும் வருவார். அவர் எத்தனை முறை வந்தாலும், இங்கு அவருக்கு ஓட்டு தேராது. இருப்பினும், மூன்றாவது இடத்திற்காக முயற்சி செய்வதற்காகத்தான் பிரதமர் மோடி வந்து கொண்டிருக்கிறார்" என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய கனிமொழி, "பாஜகவின் தேர்தல் பத்திர ஊழல்தான் உலகிலேயே மிகப்பெரிய ஊழல் என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. இவ்வளவு பெரிய ஊழலை ஒரு சட்டம் போட்டு, சட்டப்பூர்வமாக ஊழல் செய்வதை உலகத்திற்கே பாஜக கற்றுக் கொடுத்துள்ளது.

பிரதமர் மோடி பேசும் போது எனது கரங்கள் சுத்தமானது என்று கூறுவார். ஆனால், அவர்தான் உலகின் மிகப்பெரிய ஊழலுக்குச் சொந்தக்காரர். மேலும், பல்வேறு வழக்குகள் இருக்கக்கூடிய பிரமுகர்கள் பாஜகவில் இணைந்து விட்டால், அவர்கள் மீதுள்ள வழக்குகள் அனைத்தும் காணாமல் போய்விடும்" எனக் கூறினார்.

பின்னர் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசும் போது, "10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடிக்கு, இத்தனை நாட்களில் இல்லாத அக்கறை இன்றைக்கு திடீரென்று கச்சத்தீவு மீது வந்துவிட்டது. நாட்டில் உள்ள அனைவரும் இவர்களைப் பற்றி புரிந்து கொண்டார்கள். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது.

டெல்லியில் விவசாயிகள் அடிப்படை ஆதார விலை வேண்டுமென்ற அவர்களின் உரிமைக்காக போராடி வருகின்றனர். ஆனால், அவர்களை பயங்கரவாதிகளைப் போல் டெல்லிக்குள் வர விடாமல் தடுக்கின்றனர். இப்படிப்பட்ட சர்வாதிகார ஆட்சி தொடரக் கூடாது. இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும்" என்றார் கனிமொழி.

தொடர்ந்து பேசிய அவர், "நமது வேட்பாளர்கள் வெற்றி பெற்று, இந்தியா கூட்டணி (INDIA Alliance) மத்தியில் ஆட்சி அமைக்கும் போது, முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதியின் படி கேஸ் சிலிண்டர் ரூ.500 ரூபாய்க்கு கிடைக்கும். மேலும், பெட்ரோல் 75 ரூபாய்க்கும், டீசல் 65 ரூபாய்க்கும் கிடைக்கும்.

100 நாள் வேலை திட்டம், 150 நாளாக மாற்றப்படும். அதன் சம்பளமும் ரூ.400ஆக உயர்த்தப்படும். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று ராகும் காந்தி அறிவித்து உள்ளார். அதுவும் கிடைக்கும், அத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பெண்களுக்கு கூடுதலாக 1 லட்சம் ரூபாயும் கிடைக்கும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் இருந்து வந்த பிறகு ராஜ்யசபா எம்பி பதவியை தூக்கி வீசாமல் இருப்பது ஏன்? - அன்புமணியை விளாசிய விஷ்ணு பிரசாத்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.